இந்தியாவுக்கு ஒரு shocking news..!! உலக சுகாதார நிறுவனம் சென்னை மும்பைக்கு விடுத்த எச்சரிக்கை..!!
இதைச் செய்யாவிட்டால் அதிக நெரிசலான சென்னை, மும்பை போன்ற பகுதிகளில் வைரஸ் பரவலை தடுப்பது கடினம் என்று அவர் கூறினார் .
கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக மக்களை சென்றடைய இரண்டரை வருடங்கள் கூட ஆகலாம் என உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தமுடியாமல் பல்வேறு உலக நாடுகள் திணறி வருகின்றன . ஒரு தடுப்பூசி வந்தால் மட்டுமே இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர், இந்நிலையில் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் உலக சுகாதார பேராசிரியராக பணியாற்றி வரும் டேவிட் நபரோ கூறியதாவது :- பாதுகாப்பான மற்றும் நன்கு பலன் தரக்கூடிய தடுப்பூசியை உருவாக்க குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது , தொடர்ந்து அதை அதிக அளவில் உற்பத்தி செய்து 7.8 பில்லியன் கிட்டத்தட்ட 100 கோடி உலக மக்களுக்கு கொண்டு செல்ல மேலும் ஒரு வருடம் ஆகும் . சில நோய்களுக்கு பாதுகாப்பான தடுப்பூசி பல வருடங்களாகியும் இன்னும் உருவாக்க முடியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் .
கொரோனா குறித்த எச்சரிக்கையை முன்பே ஏன் தெரிவிக்கவில்லை என உலக மக்கள் தங்கள் நாட்டு அரசையும் உலக சுகாதார நிறுவனத்தையும் கேள்வி எழுப்பி வருகின்றனர் . ஸ்பெயின் இத்தாலி இங்கிலாந்து மற்றும் அமெரிக்க மக்கள் நாம் இன்னும் விரைவாக செயல்பட்டு இருக்க முடியாதா என கேட்கின்றனர் , முன்பே முடிவுகளை எடுத்து இருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும் என இப்போது நாங்கள் உணர்ந்து இருக்கிறோம் . கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் அதில் 50 முதல் 70 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை என அரசு தரவுகள் கூறுகின்றன . கொரோனா பரவலை தடுக்க இந்தியா எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியது , குறிப்பாக மும்பை சென்னை கொல்கத்தா மற்றும் டில்லி உள்ளிட்ட அடர்த்தியான மக்கள் தொகை நகரங்களைக் கொண்ட இந்தியா எதிர்பார்த்ததைவிட அதிக நாட்கள் சமூக இடைவெளியையும் தனிமையையும் கடைபிடிக்க வேண்டியிருக்கும் . இதைச் செய்யாவிட்டால் அதிக நெரிசலான சென்னை, மும்பை போன்ற பகுதிகளில் வைரஸ் பரவலை தடுப்பது கடினம் என்று அவர் கூறினார் .
வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் நபருக்கு கொரோனா அறிகுறியே தெரியாது , ஆனால் அவரால் மற்றவர்களுக்கு நோய் பரவும் என நிபுணர்கள் நம்புகின்றனர் என கூறினார். இதற்கிடையில் பிரஞ்சு நிறுவனத்தால் உருவாக்கப்படும் சனோபியின் வைரஸ் தடுப்பூசியை முதலில் அமெரிக்கா பெறும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி பால் ஹட்சன் தெரிவித்துள்ளார் இதற்கு அவர் கூறும் காரணம் , சனோபியின்தடுப்பூசி ஆய்விற்கு அமெரிக்கா நிதி அளிப்பதில் முதலிடத்தில் உள்ளது தடுப்பூசி கண்டுபிடிப்பு நிறுவனங்களில் சனோபியின் ஒரு முக்கியமான வீரர் என வர்ணிக்கிறார் ஹட்சன், உலக அளவில் இரண்டு லட்சத்தில் 90 ஆயிரம் பேருக்கும் அதிகமான மக்களை கொன்ற ஒரு தொற்று நோய்க்கு எதிராக பாதுகாப்பை தேடுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடாவிட்டால் ஐரோப்பா இன்னும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.