கொரோனா வைரஸ் தாக்குதல் ஒன்றும் பயிற்சி அல்ல எனவும் இது விட்டுக்கொடுக்கும் நேரமும் அல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் வுஹான் நகரில்  கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது .  சீனா ,  ஈரான் ,  பிரான்ஸ் ,  அமெரிக்கா ,  இத்தாலி உள்ளிட்ட உலகின் 80க்கும் அதிகமான நாடுகளில்  இந்தவைரஸ் பரவி வருகிறது.

இதற்கு இதுவரை 3 ஆயிரத்து 385பேர் உயிரிழந்துள்ளனர் .  மொத்தம் 98 ஆயிரத்துக்கும் அதிகமாகனோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  சீனாவை கடந்து இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் தொடங்கியுள்ளது .  இதுவரையில் சுமார் 36 பேர்  வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் . கொரோனாவின்  தாக்கம் சீனாவில் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் அங்குள்ள தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன .  இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவின் இது குறித்து செய்தியாளர்களை  சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் அதானம் , 

உலகநாடுகளை எச்சரித்துள்ளார்.   அதாவது கொரோனா வைரஸ் ஒன்றும் பயிற்சி கிடையாது , இது விட்டுகொடுக்கும் நேரமும் அல்ல இது, மன்னிப்பு கேட்கும் நேரமும் அல்ல இது ,  அனைத்து தடைகளையும் தாண்டி செயல்பட வேண்டிய நேரம் இது.  உலகநாடுகள் சவாலுடன் எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது .  உலக நாடுகள் பல ஆண்டுகளாக அவசரகால திட்டங்களை வகுத்து வந்த நிலையில் , இத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான நேரம் இது என அவர் கூறியுள்ளார் .