தயவுசெய்து உலக நாடுகளின் தலைவர்கள் கொரோனா வைரசை வைத்து அரசியல் செய்ய வேண்டாம், வைரசால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துங்கள் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் வலியுறுத்தியுள்ளார் .  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலகச் சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்தப் போவதாகவும் அந்நிறுவனத்தின் தலைவர் அதானம்  தொடர்ந்து சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றம் சாட்டி  இருந்த நிலையில் டெட் ரோஸ் அதனால் இவ்வாறு கூறியுள்ளார் .  உலக அளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது .  இதுவரையில் 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு  வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்துள்ளது .  இது உலக அச்சுறுத்தலாகவே தற்போது மாறியுள்ள நிலையில்  மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்கவே  இதற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . 

இந்நிலையில் தனது ஆற்றாமையை சீனாவின் மீது வெளிப்படுத்தி வரும் அமெரிக்கா ,  இந்த வைரசுக்கு சீனா தான் காரணம் என்றும்,  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  சீனா வெளிப்படையாகக் கூற மறுத்து வருவதுடன்,  பொய்யான தகவல்களை உலகிற்கு கூறி வருகிறது என குற்றஞ்சாட்டினார்,  இதற்கிடையில் உலக சுகாதர நிறுவனத்தின் தலைவர் அதானாம்,  சீனா மிக சிறப்பாக பணியாற்றி கொரோனாவில்  இருந்து மீண்டுள்ளது ,  சீனாவை மனமார பாராட்டுகிறேன் என கூறியிருந்தார். உலக சுகாதார நிறுவனத்தின் இந்த பாராட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது, இதனால்  உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவரை கடுமையாக எச்சரித்துடன்,  சீனா கொடுக்கும் அதிக நிதியை பெற்றுக்கொண்டு சீனாவுக்கு ஆதரவாக உலகச் சுகாதார நிறுவனம் நடந்துகொள்கிறது அதன் தலைவர் தொடர்ந்து சீனாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார் .  சீனா செய்யும் தவறுகளுக்கு அவர் துணை போகிறார் என எக்கசக்கமாக குற்றம்சாட்டினார், அத்துடன் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கும் நிதியை நிறுத்தப் போவதாகவும் எச்சரித்தார் .

 இந்நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்மீது  வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில்  உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அனைத்து நாடுகளின்  கவனமும் தங்கள் மக்களை காப்பாற்றுவதில் இருக்க வேண்டும் ,  தயவுசெய்து வைரஸை வைத்து  அரசியல் செய்ய வேண்டாம் என அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டுக்கொண்டார்,  தொடர்ந்து பேசிய அவர் ,  இன்னும் பல உடல்களை சவப்பெட்டியில் வைக்க வேண்டும் என விரும்பினால்  நீங்கள் அரசியல்  செய்யுங்கள் அப்படி இல்லை என்றால் இந்த அரசியலை  தவிருங்கள் என்றார்,   நாடுகளுக்கு இடையேயான காட்சிகளை ஒருங்கிணைத்து  வைரசுக்கு எதிராக ஒன்றிணைந்த போராடுங்கள் என கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என்றார்,   அமெரிக்கா சீனா இரண்டு நாடுகளும் இணைந்து  மனிதகுலத்தின் ஆபத்து மிக்க எதிரியான கொரோனாவுக்கு  எதிராகப் போராட வேண்டும் என கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறினார்.