சீனா அமெரிக்கா இல்லாத புதிய கூட்டணி..!! கொரோனா களத்தில் WHO அதிரடி..!!
தடுப்பூசிகளை உருவாக்கவும் அதன் ஆராய்ச்சியை விரிவுபடுத்தவும் அதை உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ளவும் . உலக நாடுகளின் தலைவர்கள் முன்வந்துள்ளனர் ,
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும் மருந்து மற்றும் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கும் உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது , தயாரிக்கப்படும் மருந்து மற்றும் தடுப்பூசிகளை உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார் . உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா அதன் கொடூர கரத்தை பரப்பியுள்ளது. இதில் இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது . ஆனாலும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக வல்லரசுகள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வைரஸை அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது , இதுகுறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் வைரசை எதிர்க்கவும் அதற்கு தேவையான மருந்துகள் கண்டுபிடிக்கவும், தடுப்பூசிகளை உருவாக்கவும் அதன் ஆராய்ச்சியை விரிவுபடுத்தவும் அதை உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ளவும் . உலக நாடுகளின் தலைவர்கள் முன்வந்துள்ளனர் , குறிப்பாக அதில் பிரிட்டன், பிரான்ஸ் , ஜெர்மனி மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல வல்லரசுகள் கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு தங்களை ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர் . இதற்கு உலக சுகாதார அமைப்பின் சார்பில் "landmark collaboration" என பெயரிடப்பட்டுள்ளது என டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். மருத்துவ பொருட்களை நாடுகள் பகிர்ந்து கொள்ள இந்த அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது கொரோனாவை எதிர்க்க ஒரு ஒருங்கிணைந்த கூட்டமைப்பை உலக சுகாதார நிறுவனம் ஏற்படுத்தி இருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம்.
இந்த கூட்டமைப்பில் அனைத்து தரப்பினரும் இடம்பெற வேண்டும் அனைத்து மக்களுக்கும் இணைந்து அற்பணிப்புடன் செய்லபடுவதன் மூலம் கொரோனாவை ஒழிக்க முடியும் என அதானோம் தெரிவித்துள்ளார் இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா , சீனா , அமெரிக்கா ஆகிய நாடுகளும் இணைய வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார் . இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என்றாலும் உலக சுகாதார விஷயங்களில் அமெரிக்கா முன்னிலை வகித்து வருகிறது என பாராட்டியுள்ளார் . தொற்று நோய் கையாள்வதில் உலக சுகாதார அமைப்பு உறுதியுடன் உள்ளது, மேலும் தொற்று நோய்க்கு பிந்தைய பரிசோதனைகள் செய்வதில் பலமுறை உறுதி செய்துள்ளது என அதானோம் கூறியுள்ளார் . சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியதுடன், அந்நிறுவனத்திற்கு அமெரிக்காவின் சார்பில் வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளார் , இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக ஒரு புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .