Asianet News TamilAsianet News Tamil

இந்தியா மட்டும் இல்லை என்றால் அவ்வளவுதான்..!! உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் பாராட்டு..!!

இதில் இந்தியா பங்கு கொள்ளாவிடில் உலகில் போதுமான தடுப்பூசிகள் கிடைத்திருக்காது. ஒரு தடுப்புசி கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்குப் பின் பயன்பாட்டிற்கு வர 10 ஆண்டுகள் ஆகும் ,

world health organization chief scientist appreciation  India
Author
Delhi, First Published May 13, 2020, 1:37 PM IST

கொரோனா எதிர்ப்பு போராட்டம் இன்னும் பல மாதங்களுக்கு அல்லது பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார் .  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , இதுவரையில் உலக அளவில் 43 லட்சத்து 54 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கியுள்ளது .  சுமார் 16 லட்சம் பேர் இந்த வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந்த வைரசில் மற்ற நாடுகளைவிட அதிக அளவில் அமெரிக்காவே மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .  கிட்டத்தட்ட 14 லட்சம் பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . சுமார்  83 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் .  அதற்கடுத்த நிலையில் ஸ்பெயின் இத்தாலி ஜெர்மனி பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.   சமீபத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளான ரஷ்யாவில் வைரஸ்  மளமளவென பரவி பாதிப்பு  பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது . 

world health organization chief scientist appreciation  India

அங்கு இதுவரை  2 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அந்நாட்டில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டு வருகிறது .  அதேபோல் கொரோனா பட்டியலில்  நான்காவது இடத்தில் உள்ள பிரிட்டனில் இதுவரை 32 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் .   இன்னும் ஒரு சில நாட்களில் கொரோனா பாதிப்பில் இந்தியா சீனாவை   விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது .  இப்படி உலகம் முழுவதும் கொரோனா கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் ,  பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்தி இறப்பு விகிதத்தையும் குறைத்து இருப்பது பாராட்டத்தக்கது எனக் கூறியுள்ளார் .  தேசிய தொழில்நுட்ப தினவிழாவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசிய அவர்,  இந்தியாவில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் அரசு அதிகாரிகள் சிறப்பான நடவடிக்கை எடுத்ததை பாராட்டுகிறேன் , 

 world health organization chief scientist appreciation  India

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை இந்தியாவில் குறைவு ,  இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் கருணா பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர போராடி வருகின்றன .  இதற்கு இன்னும்  பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் கூட ஆகலாம் ,   அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் .  உண்மையில்  இந்தியாவில் பொது சுகாதார பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்துவதற்கான நேரமிது , தடுப்பூசி கண்டுபிடிப்பில் இந்தியா எப்போது முக்கிய பங்காற்றி வருகிறது .  இதில் இந்தியா பங்கு கொள்ளாவிடில் உலகில் போதுமான தடுப்பூசிகள் கிடைத்திருக்காது. ஒரு தடுப்புசி கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்குப் பின் பயன்பாட்டிற்கு வர 10 ஆண்டுகள் ஆகும் , ஆனால் எபோலா வைரஸுக்கு ஐந்து ஆண்டுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது . கொரோனாவுக்கு  ஓராண்டுக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சிக்கப்படுகிறது .   இதற்கு தொழில்நுட்ப பரிமாற்றம் உத்திகள் உள்ளிட்ட அனைத்து  அம்சங்களிலும் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் . 

world health organization chief scientist appreciation  India

தடுப்பூசி உருவாக்கி பரிசோதிப்பது மட்டும் போதாது அதை உற்பத்தி செய்வதே மதிப்பீடு செய்து கொள்முதல் செய்வது மக்களுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கான சுகாதார கட்டமைப்புகளை பெறுவதும் ,  மிக முக்கியமானது என எம்எஸ் சுவாமிநாதன் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார் .  உலகச் சுகாதார அமைப்பின் தகவலின்படி இந்த வைரஸால் 215 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது  என அவர் குறிப்பிட்டார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios