Asianet News TamilAsianet News Tamil

கொரோனா ஒழிந்தாலும் இந்த ஆபத்து மட்டும் நீங்காது..!! உலக வங்கி அறிவித்த கெட்ட செய்தி..!!

இந்நிலையில் பொருளாதார முடக்கத்தால் சுமார் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் எதிர்காலத்தில் ஏழைகளாவார்கள்  என உலக வங்கி தலைவர் டேவிட் மால்போஸ்  எச்சரித்துள்ளார்.   

world bank alert 6 crore people will be poor
Author
Delhi, First Published May 20, 2020, 7:26 PM IST

கொரோனா வைரஸ் எதிரொலியாக  உலகளவில் 6 கோடி மக்கள் ஏழைகளாக மாறவும் , அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக சேமித்து வைத்த லாபத்தை இழக்கவும் நேரிடும் என்றும் உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்போஸ் தெரிவித்துள்ளார் .  இவரின் இத்த தகவல் பலரையும் அதிர்சியடைய வைத்துள்ளது . கொரோனா காரணமாக, உலகளவில் 60 மில்லியன் மக்கள் வேலையிழப்பார்கள் என்றும் அவர்  கூறியுள்ளார்.   உலக அளவில் கொரொனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது கொரோனவால்  பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் ஒட்டு மொத்த நாடுகளும் ஊரடங்கை  கடைப்பிடித்து வரும் நிலையில் ,  உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .  

world bank alert 6 crore people will be poor

லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வர்த்தக உலகம்  மொத்தமாக முடங்கியுள்ளது . இதனால்  பல கோடிபேர் வேலையிழந்து பரிதவித்து வருகின்றனர் .தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்ட பின்னரும் அதன் தாக்கம் தொடரும் என பொருளாதார வல்லுனர்கள் ஆருடம் கூறி வருகின்றனர் .  இதனால் அடுத்த மூன்று வருடங்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகளும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் தவிர்க்க முடியாததாக  இருக்கும் என்றும் கூறப்படுகிறது . கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்  முடங்கியுள்ள  தொழிற்சாலைகள் மீண்டும் திறக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன . இந்நிலையில் பொருளாதார முடக்கத்தால் சுமார் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் எதிர்காலத்தில் ஏழைகளாவார்கள்  என உலக வங்கி தலைவர் டேவிட் மால்போஸ்  எச்சரித்துள்ளார்.   

world bank alert 6 crore people will be poor

இதுவரை உலக அளவில் வறுமை ஒழிக்க  எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் வீண் என்பது போல்  ஏழை நாடுகளில்  மீண்டும் பழைய நிலைமைக்கு வறுமை தலைவிரித்தாடும் நிலை உருவாகும் என தெரிவித்துள்ளார். எனவே உலக வங்கி தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கண்காணித்து வருவதுடன்  சுமார் 100 நாடுகளுக்கு அவசர உதவிகளை ஏற்பாடு செய்து அறிவித்துள்ளது உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அந்த 100 நாடுகளுக்குள் 160 பில்லியன் டாலர் மானியம் அளிக்கப்பட்டுள்ளது .  இந்த உதவித் தொகைகள் அனைத்தும் அடுத்த 15 மாதங்களில் அந்நாடுகளுக்கு வழங்கப்படும் , இந்த 100 நாடுகளிலேயே உலக அளவில் 90 சதவீதம் மக்கள் உள்ளனர் .  இதில் 39 ஆப்பிரிக்க நாடுகள் இடம்பெற்றுள்ளன ,  அதேபோல் இதில்  மூன்றில் ஒரு பகுதி ஆப்கனிஸ்தான் சாட், ஐதி, நைதர்  போன்ற பலவீனமான மற்றும் தீவிரவாதத்தால் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios