Asianet News TamilAsianet News Tamil

பேஸ்புக்கில் நெருங்கிப் பழகிய நபரிடம் ஏமாந்த பெண்! கஷ்டப்பட்டு சேர்த்த பணம் பறிபோன அவலம்!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸைச் சேர்ந்த ஒரு பெண், ஆன்லைனில் சந்தித்த நபரை நம்பி, தனது வாழ்நாள் முழுவதும் சேர்த்த சேமிப்பு அனைத்தையும் இழந்துள்ளார்.

Woman loses life savings as her Facebook boyfriend turns out to be a scammer sgb
Author
First Published Sep 11, 2023, 9:35 PM IST

ஆன்லைனில் பழகிய நண்பரால் ஏமாற்றப்பட்டதாக ஏராளமான வழக்குகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் அப்படி மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸைச் சேர்ந்த ஒரு பெண், ஆன்லைனில் சந்தித்த நபரை நம்பி, தனது வாழ்நாள் முழுவதும் சேர்த்த சேமிப்பு அனைத்தையும் இழந்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் ஃபேஸ்புக்கில் அறிமுகமான நபர் ஒருவருடன் அந்தப் பெண் நெருக்கமாகப் பழகியுள்ளார். விரைவில் அவர் மீது காதல் ஏற்பட்டிருக்கிறது. தனது பேஸ்புக் காதலனுடன் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். அந்தப் பெண்ணுடன் பேசிய நபர் தான் ஒரு கடின உழைப்பாளி என்றும் திருமணமாகி மனைவி இழந்தவர் என்று கூறியிருக்கிறார். அந்த நபர் தன்னிடம் ஒருபோதும் தகாத முறையில் நடந்துகொள்ளவில்லை என்பதால் நேர்மையானவர் என்று நம்பியிருக்கிறார்.

ஏ.டி.எம். பின் நம்பர் மறந்துவிட்டதா? ஈசியாக புதிய பின் நம்பர் பெற இரண்டு வழிகள் இருக்கு!

இருவரும் வீடியோ அழைப்பில் கூட சில முறை பேசியதால் அந்த பெண் அவரை மேலும் நம்பத் தொடங்கினார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில், அந்த நபர் பல்வேறு காரணங்களுக்காக அந்தப் பெண்ணிடம் பணம் அனுப்பும்படி கேட்கத் தொடங்கியுள்ளார். அந்தப் பெண்ணும் அவரை நம்பி கேட்கும் போதெல்லாம் பணத்தை அனுப்பியிருக்கிறார்.

Woman loses life savings as her Facebook boyfriend turns out to be a scammer sgb

ஒருநாள் அந்தப் பெண்ணை பார்க்க வருவதாகக் கூறிவிட்டு வராமல் இருந்திருக்கிறார். காரணம் கேட்டபோது, தனது கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். அப்போதுதான் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை அந்தப் பெண் உணர்ந்திருக்கிறார். "என் வாழ்க்கையில் இவ்வளவு பாதிக்கப்படுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை" என பாதிக்கப்பட பெண் குமுறுகிறார்.

இதேபோன்ற ஆன்லைன் டேட்டிங் மோசடி வழக்கு இந்தியாவிலும் இந்த ஆண்டு மே மாதம் பதிவாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 37 வயது பெண் ஒருவர், டிண்டர் மூலம் பழகிய நபரிடம் ரூ.4.5 லட்சம் பணத்தை இழந்தார். இந்த மோசடியில் ஈடுபட்டவர் தான் இங்கிலாந்தில் வசிப்பதாகக் கூறி, அந்தப் பெண்ணை காதலிக்க வைத்துள்ளார். இந்தியாவுக்கு வந்த சந்திப்பதாகக் கூறிய ஏமாற்றியுள்ளார்.

சர்டிபிகேட் தொலைஞ்சுருச்சா! கவலையை விடுங்க... ஆன்லைனில் எளிதாக டவுன்லோடு செய்யலாம்!

Follow Us:
Download App:
  • android
  • ios