நாய்க்கறி செய்திகளைப் படித்துவிட்டு அஜீரணக் கோளாறால் அலைந்துகொண்டிருக்கும் ஆசாமிகளுல் நீங்களும் ஒருவர் என்றால், இச்செய்தியின் அடுத்த வரியைக்கூட படிக்காமல் நகர்ந்துவிடுங்கள். இது மணக்க மணக்க காதலனின் மனிதக்கறி சமைத்துப் பரிமாறிய புனிதக் காதலியின் கதை.

லவ் ஃபெயிலியர் ஆயிட்டா ‘அடிரா அவள... வெட்டுடா அவள... குத்துடா அவள ... ‘ என்று தனுஷ் கோஷ்டிகள் பாடியது  ஐக்கிய அரபு அமீரகம் வரைக்கும் கேட்டிருக்கும்போல.  அங்குள்ள அல் ஐன் பகுதியில் வீட்டு வேலை செய்துவந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க மொராக்கோ பெண்ணுக்கும், மொராக்கோ நாட்டில் இருந்து இங்கு வேலைக்காக வந்திருந்த 20 வயது வாலிபருக்கும் சுமார் 7 ஆண்டுகால கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

 

ஒருகட்டத்தில் காதலி மீது கொண்டகள்ளக் காதல்  கசந்து போக, ’நான் மொராக்கோவுக்கு சென்று எனக்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள போகிறேன்’ என நல்ல காதலுக்கு திரும்பவிரும்புவதாக சொல்லியிருக்கிறார். விடுவாளா மொரட்டு மொராக்காக்காரி. காதலனை நைசாகப் பேசி வீட்டுக்கு வரவழைத்தாள். கதவை இழுத்துச்சாத்தி ரெண்டே போடு கதையை முடித்தாள். அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் வெறி தலக்கேறி காதலனை கண்டம் துண்டமாய் வெட்டி, மிக்சியில் போட்டு அரைத்து கொத்துக்கறி சமைத்தாள். மேட்டர் அத்தோடு முடியவில்லை. 

அந்த உணவை அருகாமையில் உள்ள இடத்தில் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு சுடச்சுட கறிவிருந்தாக பறிமாறி மகிழ்ந்தார்.இந்நிலையில், 3 மாதங்களாக காணாமல்போன அந்த வாலிபரை தேடி அவரது சகோதரர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சமீபத்தில் விசாரிக்க சென்றார். என்னை அவர் பிரிந்து சென்ற பிறகு இங்கு அவர் வந்ததே இல்லை என ஆவேசமாக பதிலளித்த அந்தப் பெண் அவரது முகத்தில் அடிப்பதுபோல் வீட்டுக் கதவை வேகமாக அறைந்து சாத்தினார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அந்த நபர், தனது சகோதரரை காணவில்லை என்றும் சம்பந்தப்பட்ட பெண்ணின்மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அல் ஐன் நகர போலீசில் புகார் அளித்தார். இதைதொடர்ந்து, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கிருந்த மிக்சியில் ஒரு மனிதப்பல் சிக்கி இருப்பதை கண்டனர். அந்தப் பல்லை கைப்பற்றி, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

புகார் அளித்த நபரின் மரபணுவும், அந்த பல்லுக்குரியவரின் மரபணுவையும் ஒப்பிட்டு நடத்தப்பட்ட தடயவியல் பரிசோதனையில் அந்தப் பல்லுக்கு சொந்தக்காரரை அவரது முன்னாள் காதலி கொன்று, கறிவிருந்து படைத்த கதை வெட்டவெளிச்சமானது. மிக்சியில் அரைபடாத சில பாகங்களை வெட்டி நாய்க்கு விருந்தாக்கிய விபரமும் தெரியவந்தது. தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் அந்த வெறி நாய்க் காதலிக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறதாம்.