சிறுமி ஒருவர் செய்த தவறுக்காக, அவளது வாயில் மாட்டு சாணத்தை பெண் ஒருவர் திணித்துள்ளார். இந்த சம்பவம் நேபாளத்தில் நடந்துள்ளது.

நேபாளத்தில் கொல்புரி கிதாபரியர (50) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு வாசலில் 6 வயது சிறுமி மற்ற சிறுமியர்களோடு விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறுமி, கிதாபரியாவின் வீட்டுக் குழாயை உடைத்து விட்டாள். குழாய் உடைந்ததால் ஆத்திரமடைந்த கிதாபரியர், சிறுமியின் வாயில் மாட்டுச் சாணத்தை திணித்துள்ளார்.

மாட்டுச் சாணத்தை வாயில் திணித்ததால், அதிர்ச்சியான அந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்று நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார்.

சிறுமி கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து, போலீசார் கிதாபரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.