அமெரிக்காவின் வில்லன் கிம் ஜாங்கை மிஞ்சிய கிறுக்கு பிடித்த சகோதரி.. இவங்க ஆட்சிக்கு வந்தால்.. கதை கந்தல்தான்!
இரும்புத்திரை என அறியப்படும் வட கொரியாவில், என்ன நடக்கிறது என்பது அருகில் இருக்கும் சீனா, தென் கொரியாவுக்குக்கூட தெரியாது. அந்த அளவுக்கு அங்கிருந்து காற்றுகூட வெளியேறாதபடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மொத்த உலகத்தையும் திணறடித்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், வட கொரியாவில் பரவவில்லை என அந்நாடு கூறுகிறது. இருந்தும், இதை இதுவரை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்தால் ஆட்சியை கைப்பற்ற அவரது சகோதரி கிம் யோ முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரும் கொடூர குணம் படைத்தவர், நவீன ஆயுதங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மேலும், அதிபர் கிம் ஜாங் உன்னை விட வடகொரியாவை மிகவும் பலம் பெற்ற கடுமையான நாடாக இவர் மாற்றுவார் என்றும் கூறப்படுகிறது.
இரும்புத்திரை என அறியப்படும் வட கொரியாவில், என்ன நடக்கிறது என்பது அருகில் இருக்கும் சீனா, தென் கொரியாவுக்குக்கூட தெரியாது. அந்த அளவுக்கு அங்கிருந்து காற்றுகூட வெளியேறாதபடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மொத்த உலகத்தையும் திணறடித்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், வட கொரியாவில் பரவவில்லை என அந்நாடு கூறுகிறது. இருந்தும், இதை இதுவரை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் உடல்பருமன் மற்றும் புகைபிடித்தலால் இருதய நோய்க்கு ஆளாகி, அதன் காரணமாகச் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு பீதியை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை. அதிபர் பதவியேற்றது முதல் இந்த விழாவில் அவர் பங்கேற்காதது இதுவே முதன்முறையாகும். இதனால், மேலும் சந்தேகம் வலுத்தது.
இந்நிலையில், ஜப்பான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், வடகொரியாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றபோது திடீரென கிம் ஜாங் உன் நெஞ்சுவலியால் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கிம் ஜாங் உன்னுக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது சாதாரண ஸ்டண்ட் பொருத்தும் செயல்முறையின் போது மருத்துவரின் கை நடுங்கியதால், அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அதனால் கோமாவில் இருக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிம் ஜாங் உன் குறித்த பல தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை.
இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறக்கும் பட்சத்தில் ஆட்சி பொறுப்பில் அவரது சகோதரி கிம் யோ அமர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது சகோதரி தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தம்மை எதிர்ப்பவர்கள் மீது எந்த இரக்கமும் காட்டுவதில்லை. உறவினர்களாக இருந்தாலும் கடுமையாகவே நடந்து கொள்வார். அவரைவிட அவரது சகோதரி கிம் யோ ஆட்சி மிகவும் கொடூரமாக இருக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
புதிய வகை ஆயுதங்கள் வாங்கி குவிப்பதில் அதிக மோகம் கொண்டவராம் கிம் யோ. வடகொரியாவின் அடுத்த தலைவராக தம்மை நீண்ட நாட்களாக தயார்படுத்தியும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பெண் என்று கூறி, வடகொரிய ஆளும் வர்க்கம், கிம் யோவை புறக்கணிக்காது என்றும், கிம் குடும்பத்தாரை அங்குள்ள மக்கள் கடவுளுக்கு நிகராகவே பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிம் ஜாங் உலக நாடுகளை எதிர்கொண்டதை விட கிம் யோ கடுமையாகவே நடத்த வாய்ப்பிருக்கிறது, அவரது தாத்தாவைவிடவும் அது கடுமையாக இருப்பார் என்று கூறப்படுகிறது. கம்ப்யூட்டர் அறிவியல் பட்டதாரியான கிம் யோ, சமீப காலமாகவே தமது சகோதரருக்கு உதவியாக அரசு அலுவல்களிலும் ஈடுபட்டு வருகிறார். தமது 9வது வயதில் இருந்தே சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்ற கிம் யோ, பல்கலைக்கழக படிப்பை வடகொரியாவுக்கு திரும்பிய பின்னர் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிம் யோவுக்கு ஒரே போட்டியாளர் கிம் ஜாங்கின் மனைவி ரி சோல் ஜூ. ஆனால், கண்டிப்பாக ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் அவர் இறங்கமாட்டார் என்றே கூறப்படுகிறது.