சீன அதிபர் ஜி ஜின்பிங் எதற்காக உள்நாட்டுப் போருக்கு அழைப்பு விடுத்தார்; பின்னணி என்ன?

சீனாவின் அதிபராக, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக, மத்திய ராணுவ கமிஷனின் தலைவராக நாட்டையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஜி ஜின்பிங் உள்நாட்டுப் போரில் வெற்றி பெற ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து இருந்தார். 

Why Xi jinping alert military for local war?  Taiwan or India?

சீனாவின் சர்வாதிகாரியாக திகழ்ந்து வந்த மா சே துங்கிற்குப் பின்னர் அனைத்து வகையான அதிகாரங்களும் தற்போது ஜி ஜின்பிங்கிடம் குவிந்து கிடக்கிறது. அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா போர், உலக எரிபொருள் நெருக்கடி, தைவான் பிரச்சனை, தென் சீன கடல் பகுதியில் இந்தியாவுடன் எல்லைப் பிரச்சனை என்று அனைத்திலும் முடிவுகள் எடுப்பதற்கு ஜி ஜின்பிங்கிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

உலகத் தரத்தில் சீனாவின் எதிரியாக அமெரிக்கா இருந்து வருகிறது. சமீபத்தில் சீன அதிபரின் பேச்சுக்களை உற்று நோக்கும்போது, அமெரிக்கா மீது எந்த தாக்குதலையும் நடத்தப் போவதில்லை. ஒன்று தைவான் மீது சீனாவின் கவனம் திரும்பலாம் அல்லது இந்தியாவின் மீது திரும்பலாம் என்றே அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜின்பிங்கின் சமீபத்திய பேச்சும் இதை உறுதி செய்வதாக இருக்கிறது. 

எப்போதும் இந்திய சீன எல்லைப் பகுதியில் குளிர்காலங்களில்தான் அதிகளவில் மோதல்கள் இருக்கும். எல்லையில் பனிமூடிய மலைகளை எல்லையில் தங்களுக்கு சாதகமாக சீனா பயன்படுத்தி வருகிறது. இதற்கு பதில் கொடுக்கவும் இந்தியா தயார் நிலையில் உள்ளது. எல்லையில் இருக்கும் மலைப்பகுதிகளில் சீன ராணுவத்தினரை எதிர்கொள்ளும் வகையில் புதிய நவீன ஆயுதங்களுடன் இந்திய ராணுவ வீரர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர். 

Twitter Elon Musk: ட்விட்டர் நிறுவனம் திவாலாகிவிடும்! ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்

இதை உறுதிபடுத்தும் வகையில்தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் எச்சரிக்கையும் இருந்தது. எல்லைப் பகுதியில் நீடித்து வரும் மோதலை சமாளிக்க அனைத்து வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ராணுவ கமாண்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்திய ராணுவ கமாண்டர்கள் கூட்டத்தில் எல்லை குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அரசியல் ரீதியாக ஆய்வுகளை வெளியிடும் ஆப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் நடப்பாண்டின் துவக்கத்தில் ஒரு ஆய்வை வெளியிட்டு இருந்தது. அதில், எல்லையில் இந்தியா மீது எவ்வாறு எல்லாம் ஆதிக்கம் செலுத்தலாம் என்றுதான் சீனா பார்த்துக் கொண்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எல்லையில் சீனாவை எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஒரே நாடு இந்தியா என்பதையும் சீனா உணர்ந்து இருக்கிறது. இதனால்தான் பாகிஸ்தான் உடனான இந்தியாவின் எல்லைப் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகிறது போன்ற தகவல்களும் தெரிய வந்துள்ளன. 

இந்தியாவுடன் எல்லையில் இருதரப்புக்கும் இடையிலான மோதலை அறிந்தவரும், டோக்லாம் பகுதியில் இந்தியாவுடனான மோதலில் சீன ராணுவத்தை வழி நடத்திச் சென்ற சீன ராணுவத்தின் கிழக்கு பகுதி கமாண்டர் ஜெனரல் வேடோங்கை மத்திய ராணுவ கமிஷனின் துணைத்தலைவராக ஜின்பிங் நியமித்தார். இவர் இந்திய, சீன எல்லையில் நடக்கும் மோதல்களை முற்றிலுமாக அறிந்தவர். இவருக்கு ஜி ஜின்பிங் முக்கியத்துவம் அளித்து இருப்பது இந்தியாவை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.

Solar Power India: சூரிய மின்சக்திக்கு மாறும் இந்தியா! 5 மாதங்களில் 400 கோடி டாலர் எரிபொருள் சேமித்து சாதனை

தைவான் யுத்தம்?
உக்ரைன் போரில் முழுவதுமாக ரஷ்யாவுக்கு சீனா ஆதரவு தெரிவித்து வந்தது. இதனால், தைவான் நாட்டின் மீது சீனா தனது முழு கவனத்தையும் செலுத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. 2027ஆம் ஆண்டில் தைவான் மீது போர் தொடுக்க ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று தனது ராணுவத்தை ஜி ஜின்பிங் எச்சரித்து இருப்பதாக தகவலும் வெளியாகியுள்ளது. தைவானை சீனாவுடன் இணைப்பதில் எந்த வகையிலும் மாற்றுக் கருத்து கிடையாது என்று சீனா கூறி வருகிறது.

மற்றொரு குறி இந்தியாவா?
இந்த நிலையில்தான் எல்லையில் அமைதி நிலவ வேண்டும். மேலும், சீனாவின் ராணுவ தளவாடங்களின் நடமாட்டம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இருக்க முடியும் என்று மத்திய வெளியிரவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 2020 ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி, கிழக்கு பாங்காங் ஏரியில் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2020ஆம் ஆண்டு, ஜூன்15ஆம் தேதி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இருதரப்பு ராணுவ வீரர்களுக்கும் நடந்த மோதலில் இந்தியா 20 ராணுவ வீரர்களை இழந்தது. சீனா நான்கு வீரர்களை இழந்தது என்று கூறப்பட்டது. ஆனால், சீனா 42 வீரர்களை இழந்தது என்ற தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து, இருதரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. சீனாவின் மற்றொரு குறி இந்திய எல்லைப் பகுதியாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தையில் சிலவற்றுக்கு தீர்வுக்கு காணப்பட்டுள்ளது. இன்னும் சிலவற்றுக்கு தீர்வு காணப்படவில்லை என்று அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios