Asianet News TamilAsianet News Tamil

கொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்... பகீரென பீதி கிளப்பும் உலக சுகாதார நிறுவனம்!

"எச்.ஐ.வி. வைரஸ் இதுநாள் வரை அழிக்கப்படவில்லை; ஆனால், அந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் வழிகளை நாம் கண்டுபிடித்துள்ளோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்று கணிக்கப்படுவதையும்கூட என்னால் ஏற்க முடியவில்லை; நம்பவும் முடியவில்லை.” என்று மைக் ரயான் தெரிவித்துள்ளார்.
 

WHO Warns that corona virus may not be destroyed
Author
USA, First Published May 14, 2020, 9:19 AM IST

மனித சமூகத்தில் ஒவ்வோர் ஆண்டும் பரவும் வைரஸ்களில் ஒன்றாக கொரோனா வைரஸும் மாறக்கூடும். இந்த வைரஸ் முற்றிலும் அழியக்கூடிய நிலையை அடையாமலும்கூட போகலாம் என்று உலக சுகாதா நிறுவனம் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

WHO Warns that corona virus may not be destroyed
உலகையே நடுங்க வைத்துள்ளது கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ். உலகில் எல்லா நாடுகளிலும் பரவி உள்ள இந்த வைரஸால் உலகே முடங்கிக் கிடக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் சுமார் 45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 16 லட்சம் பேர் கொரோனா நோயிலிருந்து மீண்டுள்ளனர். இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்தும் சிகிச்சைக்கான வழிமுறைகளையும் கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவ உலகம் திண்டாடிவருகிறது.

WHO Warns that corona virus may not be destroyed
மேலும் இந்த வைரஸ் இன்னும் 2 ஆண்டுகளுக்கு உலகில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவ்வப்போது மருத்துவ விஞ்ஞானிகள் அறிவித்துவருகிறார்கள். இந்நிலையில் இந்த வைரஸ் அழியாமலேகூட போகவும் செய்யலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அணுகுண்டு வீசியிருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் அவசர கால திட்ட நிர்வாக இயக்குநர் மைக் ரயான் இந்த எச்சரிக்கையை உலகுக்கு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இல்லை. தடுப்பு மருந்து இல்லாமல் மக்களுக்கு போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். இப்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட, நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பெரும் முயற்சி உலக நாடுகளுக்குத் தேவைப்படும். WHO Warns that corona virus may not be destroyed
இதேபோல தடுப்பு மருந்துகளை போதுமான அளவு உற்பத்தி செய்து, அவற்றை உலகம் முழுவதும் விநியோகிக்க அதீத முயற்சியும் உழைப்பும் தேவைப்படும். எனவே, கொரோனா வைரஸ் நீண்ட காலம் உலகில் இருக்கலாம். ஏற்கனவே மனித சமூகத்தில் ஒவ்வோர் ஆண்டும் பரவும் வைரஸ்களில் ஒன்றாக கொரோனா வைரஸும் மாறக்கூடும். இந்த வைரஸ் முற்றிலும் அழியக்கூடிய நிலையை அடையாமலும்கூட போகலாம்.
எச்.ஐ.வி. வைரஸ் இதுநாள் வரை அழிக்கப்படவில்லை; ஆனால், அந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் வழிகளை நாம் கண்டுபிடித்துள்ளோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்று கணிக்கப்படுவதையும்கூட என்னால் ஏற்க முடியவில்லை; நம்பவும் முடியவில்லை.” என்று மைக் ரயான் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios