எய்ட்ஸிடம் தப்பித்து கொரோனாவிடம் சிக்கிய ஆப்பிரிக்கா..!! ரத்தத்தை உறைய வைக்கும் சோகம்..!!
இதே காலகட்டத்தில் சுமார் 83 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது ,
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் ஆப்பிரிக்கா முழுவதும் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் உயிரிழக்கக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது , சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இந்த வைரஸ் இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும் என கண்டுபிடித்துள்ளது எனவே வறுமையின் வளர்ப்புப் பிள்ளைகளாகவும் ஏழ்மையின் தத்துப் பிள்ளைகளாகவும் இருந்து வரும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் கொடூரமாக இருக்கும் என்றும் அதனால் உயிரிழப்புகள் அதிக அளவில் நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது . உலக சுகாதார நிறுவனத்தின் ஆப்பிரிக்க தலைவர் மாட்சிடிசோ மொயெட்டி இதுகுறித்து தெரிவிக்கையில் இந்த வைரஸ் ஆப்பிரிக்க கண்டத்தில் மிக மெதுவாக பரவும் என்றும் தெரிவித்துள்ளார், மேலும் தெரிவித்துள்ள அவர் , இந்த வைரஸ் அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பாதித்துள்ளன, அங்கு மட்டும் சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம்பேர்இறந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வைரஸ் தற்போது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தலைகாட்டத் தொடங்கி உள்ளது , ஆப்பிரிக்காவில் சுமார் ஒரு பில்லியன் மக்கள் தொகை கொண்ட 47 நாடுகள் உள்ளன . எகிப்து லிபியா துனிசியா மொராக்கோ எரித்ரியா சூடான் சோமாலியா மற்றும் ஜிபூட்டி உள்ளிட்ட நாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது தற்போது ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியா , தென்னாப்பிரிக்கா மற்றும் ஐவரிகோஸ்ட் உள்ளிட்ட பிற நாடுகளில் இந்த வைரஸ் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது . ஆனால் அந்நாடுகள் இத்தனை நாட்களாக கடைப்பிடித்து வந்த ஊரடங்கு தற்போது தளர்த்தப் திட்டமிட்டு வருகின்றன , எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மோசமான பாதிப்புகளை ஏதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் 29 மில்லியன் முதல் 44 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுவர், இதே காலகட்டத்தில் சுமார் 83 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது ,
தற்போது ஆப்பிரிக்க கண்டத்தில் இதுவரை மொத்தம் 2000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது . அதேபோல் தென்னாப்பிரிக்காவில் சுமார் 8 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 160 ஆக உள்ளது, அல்ஜீரியாவில் 483 பேர் உயிரிழந்துள்ளனர் , தற்போது தென்ஆப்பிரிக்காவில் வைரஸ் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் வைரஸ் மெல்ல பரவும் அடுத்த சில ஆண்டுகளுக்கு மக்கள் வாழ்வின் ஒரு அங்கமாக அது மாறக்கூடும் எனவே பிராந்தியத்தில் பல அரசாங்கங்கள் அதிகவனத்துடன் நடந்துகொள்ளாவிட்டால் விளைவு பயங்கரமாக இருக்குமென WHO தெரிவித்துள்ளது எனவே அதிக அளவில் ஆப்பிரிக்காவில் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் வைரஸ் கண்டுபிடிக்க வேண்டும் , அவர்கள் உடனுக்குடன் தனிமைப்படுத்த படவேண்டாம் முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.