வெளிநாடுகளில் இருந்து அதிக Money Order பெற்ற நாடு இந்தியா... சீனா 2வது இடம்... வாய் பிளக்கும் WHO...

கடந்த 2021  ஆம் ஆண்டு உலக அளவில் அதிக மணியார்டர் களை பெற்ற நாடு இந்தியா என WHO அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து மணி ஆர்டர்கள் பெறுவதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்றோம் அது தெரிவித்துள்ளது.


 

 WHO report, India was the country with the highest number of money orders in 2021.

கடந்த 2021  ஆம் ஆண்டு உலக அளவில் அதிக மணியார்டர் களை பெற்ற நாடு இந்தியா என WHO அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து மணி ஆர்டர்கள் பெறுவதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்றோம் அது தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகினர். இதே நேரத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பணப் பரிமாற்றம் என்பது மிகவும் எளிமையாக பட்டுள்ளது, மொபைல் பேங்கிங் எனப்படும் டிஜிட்டல் பேங்கிங் மூலமாக ஒரு நொடியில் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்துவிட முடியும்,

ஆனால் இப்படிப்பட்ட நேரத்திலும் கூட இந்தியாவிற்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பும் நிலை தொடர்ந்துள்ளது. சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் 2021ஆம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து இந்தியா 87 பில்லியன் டாலர் மணி ஆர்டர்களை பெற்றுள்ளது, சர்வதேச அளவில் மணியார்டர் பெற்றதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது,

 WHO report, India was the country with the highest number of money orders in 2021.

இதையும் படியுங்கள்: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி… உணவுக்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள்!!

இந்தியாவில் இருந்து பலர் நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். வேலைக்காக பல நாடுகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர், உலக அளவில் மக்கள் தொகையில் 8 பேரில் ஒருவர் புலம்பெயர்ந்து வாழ்வதாக WHO தெரிவித்துள்ளது. 
இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து பலர் டாலர்களாக இந்தியாவுக்கு மணியாடர் செய்கின்றனர், அதிகம் டாலர்கள் மணியாடர் பெரும் நாடுகளில் இந்தியா, சீனா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:  Droupadi Murmu:ஜனாதிபதியாகிறார் திரெளபதி முர்மு: 20ஆயிரம் லட்டு தயார்: சொந்த ஊரில் கொண்டாட்டம் ஆரம்பம்

இந்தியாவுக்கு அடுத்து சீனா மெக்சிகோ இடம்பெற்றுள்ளது. WHO அறிக்கையின்படி பெரும்பாலும் அமெரிக்காவிலிருந்தே இந்தியாவுக்கு அதிக அளவில் மணி ஆர்டர்கள் வந்துள்ளன, அதைத்தொடர்ந்து அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மணி ஆர்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. கொரோனா நெருக்கடி நேரத்தில் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் வருமானம் இன்றி தவித்த நிலையில் இந்தியாவுக்கு மணி ஆர்டர் மூலம் 87 பில்லியன் டாலர் கிடைத்துள்ளது.

 WHO report, India was the country with the highest number of money orders in 2021.

சீனா மற்றும் மெக்சிகோவுக்கு 53 பில்லியன் டாலர், பிலிப்பைன்ஸ் 36 பில்லியன் டாலர், எகிப்து 33 பில்லியன் டாலர் மணி ஆர்டர்கள் பெற்றுள்ளன. புலம்பெயர்ந்தோர் மற்றும் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் உறவினர்களிடமிருந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அதிக அளவில் மணி ஆர்டர்கள் வந்துள்ளன. இது நாட்டின் பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் WHO அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios