Asianet News TamilAsianet News Tamil

கொரோனா விஷயத்தில் WHO மீது சந்தேகம்... 62 நாடுகள் அறிக்கைக்கு இந்தியா ஆதரவு..!

உலகின் 73 நாடுகள் கொரோனா பரவல் விஷயத்தில் வெளிப்படையான விசாரணை தேவை என விவாதித்து வருகின்றன. இந்த விசாரணை அறிக்கைக்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

WHO is skeptical over Corona issue ... India backs 62 countries report
Author
India, First Published May 18, 2020, 3:55 PM IST

உலகச் சுகாதார அமைப்பின் 73 ஆவது பொதுக் குழுக்கூட்டம் இன்று ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கொரோனா வைரஸ் பரவல் பற்றிய முழுமையான விசாரணை தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி உலகின் 62 நாடுகள் வரைவு அறிக்கை ஒன்றை தயார் செய்து தாக்கல் செய்திருக்கிறது. இந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவல் எங்கிருந்து ஆரம்பித்தது? வைரஸின் தன்மை என்ன? நோய்த் தொற்றுக்கு எதிராக உலகச் சுகாதார அமைப்பின் செயல்பாடுகள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைத்து 7 பக்க அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.WHO is skeptical over Corona issue ... India backs 62 countries report

முன்னதாக கொரோனா வைரஸ் பரவலில் சந்தேகம் இருப்பதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகள் வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. தற்போது ஐரேப்பிய நாடுகளும் ஒன்று சேர்ந்து உலகில் மொத்தம் 62 நாடுகள் கொரோனா வைரஸ் நடவடிக்கையில் உலக சுகாதார அமைப்பின் பங்கு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறது. இந்த அறிக்கைக்கு இந்தியா, கனடா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. WHO is skeptical over Corona issue ... India backs 62 countries report

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் இதுவரை 48 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பினால் அமெரிக்காவில் அதிக உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. கொரோனா பரவலின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே அமெரிக்க அதிபர் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து சந்தேகத்தை எழுப்பி வந்தார். அந்தக் கட்டத்தில் ஆஸ்திரேலியா, பிரிட்டன் என ஒரு சில நாடுகள் மட்டுமே சந்தேகத்தை வெளிப்படுத்தின. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகச் சுகாதார அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் 73 நாடுகள் கொரோனா பரவல் விஷயத்தில் வெளிப்படையான விசாரணை தேவை என விவாதித்து வருகின்றன. இந்த விசாரணை அறிக்கைக்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios