அமெரிக்‍க அதிபர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், மின்னல் வேகப் பிரச்சாரத்தில் குடியரசுக்‍ கட்சி வேட்பாளர் Donald Trump, ஜனநாயகக்‍ கட்சி வேட்பாளர் Hillary Clinton ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். 

அமெரிக்‍காவில் நடத்தப்பட்ட கருத்துக்‍ கணிப்பின்படி, சுமார் ஒரு சதவீத வாக்‍குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்‍கும் ஹிலரி கிளிண்டனை, தோல்வியடையச் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் டிரம்ப், அனல் பறக்‍கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். Michigan மாகாணம் Sterling Heights என்ற இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டிரம்ப், ஜனநாயகக்‍ கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் ஊழல் புரிந்தவர் என குற்றம்சாட்டினார். 

இதனிடையே, Ohio மாகாணம் Cleveland என்ற இடத்தில் செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்த ஹிலரி கிளிண்டனின் தகவல் தொடர்பு இயக்‍குநர் Jennifer Palmieri, சர்ச்சைக்‍குரிய மின்னஞ்சல் பிரச்னை தீர்க்‍கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். (7180)

இதனை உறுதிப்படுத்தும் வகையில், புலனாய்வு அமைப்பான FBI இயக்‍குநர் James Comey அமெரிக்‍க நாடாளுமன்றத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், சர்ச்சைக்‍குரிய புதிய மின்னஞ்சல்கள் குறித்து ஆய்வு செய்ததில், ஹிலரி கிளிண்டன் மீதான குற்றச்சாட்டு உறுதியாகவில்லை என்றும், புலனாய்வு அமைப்பின் முந்தைய முடிவில் மாற்றம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப்பும், ஹிலரி கிளிண்டனும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி வரும் நிலையில், அதிபர் பதவிக்‍கு பொருத்தமான ஒருவரை தேர்வு செய்வதில் அமெரிக்‍க மக்‍கள் குழப்பம் அடைந்துள்ளனர். 

வேறு சிலரோ, இப்படிப்பட்ட மனக்‍குழப்பமும் இன்றி யார் அதிபர் ஆனாலும் கவலை இல்லை என்ற மனநிலையில் உள்ளனர். 

அமெரிக்‍க மக்‍களின் எண்ணம் எதுவாக இருந்தபோதிலும், புதிய அதிபராக வெற்றிபெறப் போவது ஹிலரியா? அல்லது டிரம்ப்பா? என்ற பெரும் எதிர்பார்ப்பு உலக மக்‍களிடையே நிலவுகிறது.