கொரோனா மரணங்கள் இரு மடங்காக எகிறும்... உலக நாடுகளை அலர்ட் செய்யும் WHO..!
கொரோனா தடுப்பூசி அறிமுகமாவதற்குள், நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட இரு மடங்காக அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அவசரக் காலப் பிரிவுத் தலைவர் மைக்கேல் ரையான் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், “கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் பணியை உலக நாடுகள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கொரோனா விஷயத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுசேராவிட்டால்; கொரோனா நோய்த்தொற்றுக்குப் பலியாவோரின் எண்ணிக்கை இப்போது இருப்பதைவிட தீவிரமாக அதிகரிக்கும்.
கொரோனா தடுப்பூசி அறிமுகமாவதற்குள், நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட இரு மடங்காக அதிகரிக்கும். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிவதோடு மட்டுமின்றி, கொரோனா எப்படி, எதன் வழியாகப் பரவுகிறது என்பதையும் கண்டறிய வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவது, சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு நீரால் கழுவாதல் போன்ற அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் உலக நாடுகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டியது கட்டாயம்” என்று மைக்கேல் ரையான் தெரிவித்துள்ளார்.