where is the missing Malaysia Airlines plane
239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் வடக்கு திசையில் விழுந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து திடீரென மாயமானது. தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வந்தது.
ஆனால் விமானம் கடலில் விழுந்த்தற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்காததால் தேடும் பணி கடந்த ஜனவரி மாதத்தோடு நிறுத்தப்பட்டது.இதற்கிடையே மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் வடக்கில் இருந்து 2500 சதுர க்லோ மீட்டர் பரப்பளவில் விழுந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
