இஸ்ரேல் நாட்டின் இரும்பு குவிமாடம் என்றால் என்ன? இதன் பணி என்ன?
பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் அறிவித்து இருக்கிறார். போரை அவர் வரவழைக்கவில்லை. போருக்கு வா என்று பாலஸ்தீன தீவிரவாதிகள் அழைப்பு விடுத்தால், இன்று இறங்கி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார் பெஞ்சமின் நெதன்யாகு.
பாலஸ்தீன தீவிரவாதிகள் திடீரென இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக பலியானார்கள். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு பெஞ்சமின் நெதன்யாகுவும் அதிரடியாக பதிலடி கொடுத்தார். பாலஸ்தீன பகுதியில் காசாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இந்த தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு நிம்மதியற்ற நிலையை உருவாக்கி வருகின்றனர்.
காலம் காலமாக பாலஸ்தீன தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க இஸ்ரேல் தொழில்நுட்ப ரீதியில் இரும்பு குவிமாடம் ஒன்று அமைத்து இருந்தது. பாலஸ்தீன தீவிரவாதிகளிடம் இருந்து எந்த மாதிரியான தக்குல்தல்கள் வந்தாலும், இந்த குவிமாடம் அதை அறிந்து தாக்குதல்களை அழித்துவிடும். இப்படி அதிநவீன தொழில்நுட்ப பாதுகாப்பில் அமைக்கப்பட்டு இருக்கும் இரும்பு குவிமாடத்தையும் மீறி எப்படி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது உலகையே மிரள வைத்துள்ளது.
இஸ்ரேல் சிறுவனை துன்புறுத்தும் பாலஸ்தீன சிறுவர்கள்: வைரல் வீடியோ!
இரும்பு குவிமாடம் என்றால் என்ன?
இஸ்ரேல் அரசு பாலஸ்தீன தீவிரவாதிகளின் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு என்று அமைக்கப்பட்டதுதான் இரும்பு குவிமாடம். குறுகிய தூரத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளை இந்த குவிமாடம் கண்டறிந்து இடைமறித்து அழித்துவிடும். ஒரே நேரத்தில் பல ஏவுகனைகளை எதிர்கொள்ளும் சக்தி இந்த இரும்பு குவிமாடத்திற்கு இருக்கிறது.
இந்த குவிமாடத்தை ரஃபேல் அட்வான்ஸ்டு டிபென்ஸ் சிஸ்டம்மும், இஸ்ரேலின் விமானப்படை தொழிற்சாலையும் இணைந்து அமைத்துள்ளது. மார்ச், 2011 முதல் இந்த் குவிமாடம் செயல்பட்டு வருகிறது. முதன் முதலாக அதே ஆண்டில் காசாவில் இருந்து தீவிரவாதிகள் ஏவிய ஏவுகணையை இந்த இரும்பு குவிமாடம் தடுத்து அழித்தது. அன்று முதல் பல ஆயிரம் ஏவுகணைகளை இந்த இரும்பு குவிமாடம் அழித்துள்ளது. காசா மற்றும் தெற்கு லெபனானில் இருந்து ஆயுத ஆபத்துக்களை எதிர்கொள்ளவே அமைக்கப்பட்டு இருந்தது. இஸ்ரேல் ஏவுகணை ராணுவ அமைப்புதான் இந்த இரும்பு குவிமாடத்தை கண்காணித்து வருகிறது.
ஹமாஸ் - இஸ்ரேல் போர் மூண்டதால் மீண்டும் அப்படியே பலித்த நாஸ்டர்டாமஸ் கணிப்பு!
இஸ்ரேல் இரும்பு குவிமாட துறையுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டில் அமேரிக்கா இஸ்ரேலிடம் இருந்து இரண்டு இரும்பு குவிமாடங்களை வாங்கி இருந்தது. இதையடுத்து அமெரிக்காவின் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பெர் டெல் அவிவ் சென்று இரும்பு குவிமாடத்தை பார்வையிட்டு வந்தார். இரண்டு நாடுகளும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து வருகின்றன.
இரும்பு குவிமாடம் எவ்வாறு செயல்படும்?
இரும்பு குவிமாடத்தில் ராடார் அமைக்கப்பட்டு இருக்கிறது. எந்தப் பகுதியில் இருந்து ராக்கெட்டுகள் வருகிறது என்பதை இந்த குவிமாடம் கண்டுபிடிக்கும். கணினியின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ராக்கெட்டின் பாதை மற்றும் அதன் மதிப்பிடப்பட்ட தரையிறங்கும் பகுதியை ஆய்வு செய்யும்.
ஒரு ராக்கெட்டை வீழ்த்துவதற்கும், இஸ்ரேல் நாட்டிற்குள் வரும் ஏவுகணையை இடைமறிப்பதற்குமான கட்டளையை ஏவுதளம் பெறுகிறது. நாட்டிற்குள் வரும் ஏவுகணையால் மக்கள் ஆபத்தில் இருக்கிறார்களா என்பதை கணினியின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தீர்மானிக்கிறது. ஏவுகணை அச்சுறுத்தலாக இல்லை என்றால், அந்த அமைப்பு ராக்கெட்டை அனுமதிக்கிறது.
இது ஒரு குறுகிய தூர அமைப்பு என்பதால், இரும்பு குவிமாடம் சுமார் 40 மைல்கள் அல்லது அதற்கும் குறைவான தூரம் கொண்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்றவாறு கப்பல்கள் அல்லது நிலம் முழுவதும் நகர்த்தப்படும் திறனையும் கொண்டுள்ளது. உள்வரும் ஏவுகணைகளைத் தொடர்ந்து இடைமறிக்க இரும்பு குவிமாடத்தில் தொடர்ந்து ஏவுகணைகளை லோடு செய்து கொண்டே இருக்க வேண்டும். சமீபத்தில் ஏவப்பட்ட 90 சதவீத ராக்கெட்டுகளை இரும்பு குவிமாடம் அழித்துள்ளது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா 2011 ஆம் ஆண்டில் இரும்பு குவிமாடம் அமைக்க நிதியுதவி வழங்கத் தொடங்கியது. இரும்பு குவிமாடத்தின் 55% பொருட்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. இஸ்ரேல் நிகரற்ற அமெரிக்க ராணுவ உதவியைப் பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 3 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவிடம் இருந்து தளவாடங்களை இஸ்ரேல் பெறுகிறது. இரும்பு குவிமாடத்திற்கு மட்டும், 2011-2021 வரை அமெரிக்கா 1.6 பில்லியன் டாலர் அளவிற்கு தானாக முன்வந்து உதவியுள்ளது.
ஹமாஸ் மிகவும் நுட்பமாக செயல்பட்டு கடந்த சனிக்கிழமை தாக்குதலை மேற்கொண்டது. அதாவது, முதலில் ஆளில்லா விமானத்தை வேகமாக விண்ணுக்கு செலுத்தியது. செலுத்திய சில நொடிகளில் இரும்பு குவிமாடத்தை தாக்கியது. தாக்கும்போது, ஒலி எழுப்பும் தொழில்நுட்பம் குவிமாடத்தில் இல்லை. இந்த நிலையில் தொடர்ந்து 5000 ராக்கெட்டுகளை ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவினர். இதற்கு பின்னணியில் ஈரான் இருக்கிறது என்ற செய்தியும் வெளியாகி வருகிறது.
இஸ்ரேல் ராணுவத்தின் கைக்கு செல்லுமா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. அனால், ராணுவ மையத்திற்கு சென்று அங்கேயே இருந்து நடவடிக்கைகளை நெதன்யாகு கவனித்து வருகிறார்.