கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் சீனா ஒரு வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஒப்பிட முடியாத சோதனையை எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளதாக  அந்நாட்டின் அதிபர் ஜீ ஜின்பிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் களத்தில் சேவையாற்றிய மருத்துவ நிபுணர்களை  கௌரவித்து, விருது வழங்கும் விழா சீனாவில் நடைபெற்றது. அதில் பேசிய அதிபர் ஜீ ஜின்பிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுபே மாகாணம், வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. சுமார் 2.74 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200க்கும் அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. 8.96 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலக அளவில் 1.95 கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பெரு உள்ளிட்ட நாடுகள் மிககடுமையாக வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. 

ஒட்டுமொத்த உலகுக்கும் வைரஸ் பரவ காரணமாக இருந்த சீனா, கொரோனா வைரஸ் தொற்று பட்டியலில் 39வது இடத்தில் உள்ளது. நாட்டில் மொத்தத்தில் 85 ஆயிரத்து 144 பேர் மட்டுமே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 4,634 பேர் மட்டுமே. ஒட்டுமொத்த உலகமும் இந்த வைரஸை கட்டுப்படுத்த எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் ஆனாலும் இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. பிரத்தியேக தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டால் மட்டுமே இதைக் கட்டுப்ப  டுத்த முடியும் என ஒட்டுமொத்த உலகமும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இந்நிலையில், இந்த வைரசுக்கான தடுப்பூசி கண்டு பிடிக் கும் ஆராய்ச்சியில் சீனா மிக தீவிரமாக  ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில்  அந்நாட்டில் மருத்துவ நிபுணர்களை கவுரவித்து விருது வழங் கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அந்த நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாவது:-  covid-19க்கு எதிரான போராட்டத்தில் சீனா ஒரு வரலாற்று மற்றும் ஒப்பிட முடியாத சோதனையை நிறைவேற்றியுள்ளது. 

இந்த விழாவில் மருத்துவத்துறையைச் சேர்ந்த நான்கு ஹீரோக்கள் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இந்த விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். எல்லோரும் முகக்கவசங்கள் அணிந்திருந்தனர். சீன ஊடகங்கள் சீன அரசு covid-19 எதிராக எடுத்த நடவடிக்கை களை பாராட்டி வருகின்றன. சீனாவில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடி சீன கம்யூனிஸ்ட் கட்சியை மிக விரைவாக செயல்பட வைத்தது. சீனாவில் தொற்று நோய்க்கு எதிராக துணிச்சலான போராட்டத்தை முன்னெடுத்த மருத்துவர்களை நாடும் நாட்டு மக்களும் பாராட்டுகிறோம். இந்த தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கையில் ஒப்பிட முடியாத மற்றும் வரலாற்று சோதனையை நாங்கள் கடந்து விட்டோம் என அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் மிக ஆரம்பத்திலேயே வெற்றியை நாங்கள் அடைந்தோம், பொருளாதார மீட்சி மற்றும் covid-19 அதற்கு எதிரான போராட்டத்தில் சீனா உலகின் முன்னணியில் உள்ளது. உலகெங்கிலும் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் சீனா முன்மாதிரியாக உள்ளது. 

இந்த வைரஸின் தோற்றம் மற்றும் அதன் தீவிரம் குறித்த தகவல்களை மறைத்து வைத்திருப்பதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதிபர் ஜீ ஜின்பிங் இவ்வாறு கூறியுள்ளார். சீனாவில் நடந்த அந்த மருத்துவ விழாவில் சீனாவில் மிகவும் பிரபலமான மருத்துவ நிபுணரான 83 வயதான சோங் நன்ஷான் உட்பட 4 பேர் கௌரவிக்கப்பட்டனர். சீனாவில் அவர் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின்  முகமாக உருவெடுத்துள்ள நிலையில் அதிபர் ஜி ஜின்பிங் அவருக்கு சீனாவின் மிக உயர்ந்த தேசிய பதக்கம் வழங்கினார். சீனாவுக்கு பிறகு இப்போது வைரஸில் தோற்றத்தை கண்டுபிடிப்பதில் உலகின் மருத்துவ தொழிலாளர்களுடன் ஈடுபடுவார் என்று அவர் கூறினார்.