கொரோனாவுக்கு எதிராக நிர்வாணமாக இருக்கிறோம்..!! பிளாஸ்டிக் உறைகளுக்குள் இங்கிலாந்து டாக்டர், நர்சுகள்..!!
அதேபோல லண்டனில் நார்த்விக் பார்க் மருத்துவமனையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
இங்கிலாந்து மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பிபிடி எனப்படும் பாதுகாப்புக் கவசம் உடைகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் குப்பை அள்ளும் பிளாஸ்டிக் பைகளை அணிந்து சிகிச்சை வழங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் . இதற்கான புகைப்படங்கள் ஆங்கில நாளேடுகளில் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது , உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது . இதுவரையில் லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்துள்ளது . அமெரிக்கா , இத்தாலி , ஜெர்மன் , பிரான்ஸ் , ஸ்பெயின் , உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தும் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் வல்லரசு நாடான அமெரிக்காவும் ஒரு காலத்தில் பல்வேறு நாடுகளை தங்கள் காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்து ஆட்சி புரிந்த பிரிட்டிஷ் பேரரசாக விளங்கிய இங்கிலாந்தும் தற்போது இந்த வைரஸ் எதிர்கொள்ள முடியாமலும் திணறி வருகின்றன. அங்குள்ள மருத்துவமனைகளில் போதிய அளவில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கூட இல்லாத நிலையே உள்ளது .
பீரங்கிகள், துப்பாக்கிகள் இல்லாமல் ராணுவ வீரர்கள் எப்படி போர்க்களத்திற்கு செல்ல முடியாதோ, அதேபோல்தான் நாங்களும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கொரோனா என்ற போர்க்களத்திற்கு செல்ல முடியாது என அந்நாட்டு மருத்துவர்கள் போர்க்குரல் எழுப்பி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் நாங்கள் கொரோனாவுக்கு எதிராக நிர்வாணமாக இருக்கிறோம் என கூறி தங்கள் நிலைமையை இந்த உலகத்திற்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளனர், இந்நிலையில் மன்ஹாட்டனில் உள்ள சினாய் வெஸ்ட் மவுண்ட் மருத்துவமனையில் பணியாற்றும் மூன்று செவிலியர்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள் இல்லாததினால் குப்பை சேகரிக்கும் பிளாஸ்டிக் பைகளை தங்களுக்கு பாதுகாப்பு ஆடையாக அணிந்துள்ளனர் , இந்த புகைப்படத்தை வெளியிட்டு தங்களுடைய நிலைமை இதுதான் என அவர்கள் அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர், இது ஆங்கில நாளிதழ்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அது மட்டுமின்றி தற்போது இந்த மூன்று செவிலியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதேபோல லண்டனில் நார்த்விக் பார்க் மருத்துவமனையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . அமெரிக்க மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை போல இங்கிலாந்திலும் கடுமையான பற்றாக்குறை நீடிக்கிறது.
இங்கிலாந்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவமனைகளாக உள்ளது, அது போன்ற மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 50% க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முதல் வார்டு மேலாளர்கள் வரை வைரசுக்கு பாதிக்கப்படும் சூழல் உள்ளது என இங்கிலாந்து பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள நார்த் வெஸ்ட் பல்கலைக்கழக ஹெல்த்கேர் NHS அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் , இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பல மருத்துவர்கள் செவிலியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் , இது மிகவும் துரதிர்ஷ்டமான செய்திதான், இது யாரும் எதிர்பாராதது அல்ல , உலகில் பல இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது , இந்நிலையில் எங்களது மருத்துவ ஊழியர்களும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களும் விரைவில் பூரண குணம் அடைந்து வருவார்கள் என நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார் .