1,156 லட்சம் கோடி மதிப்புள்ள கடல் புதையல்; எங்களுடையது என உரிமை கோரும் மூன்று நாட்டு அரசுகள்;
300 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய, மிகப்பழமையான கப்பல் ஒன்று இப்போது கொலம்பியா கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கும் முன், ஸ்பெயினில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது, ஸ்பெயின் மன்னருக்கு உதவுவதற்காக, இந்த கப்பல் தென் அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பலின் பெயர் சான் ஜோஸ் என்பதாகும்.
இந்த கப்பலில் மன்னருக்காக ஏராளமான பொன்னும் பொருளும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 300 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிப்போன இந்த கப்பலில் இருக்கும் பொக்கிஷங்களின் மதிப்பு மட்டும், சுமார் 1,156 லட்சம் கோடி ஆகும். இதில் இருக்கும் ஆபரணங்கள் மற்றும் பொருள்கள் மிக பழமையானவை என்பதால், இதன் மதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த கப்பல் சில வாரங்களுக்கு முன்பு தான் ஜெஃப் என்ற ஆராய்ச்சியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. ”சான் ஜோஸ்” கப்பலை அவர் பயன்படுத்திய ”ரெமெஸ் 6000” எனும் நீர் மூழ்கி கப்பல் தான் கண்டுபிடித்தது. தற்போது இந்த கப்பலுக்கு தென் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் கொலம்பியா அரசுகள் உரிமை கோரி வருகிறது.
ஆனால் இதுவரை எந்த தீர்மானமும் இவ்விஷயத்தில் எடுக்கப்படவில்லை. சர்வதேச கடல் விதிமுறைகளின் படி கடலில் கிடைக்கும் எந்த பொருளும், அந்த பகுதியில் உள்ள நாட்டிற்கு தான் சொந்தம். அந்த வகையில் கொலம்பியாவிற்கு இந்த புதையலுக்கான உரிமை கிடைக்க அதிகம் சாதகங்கள் இருக்கிறது