ஈராக்கில் Mosul நகரை மீட்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ள நிலையில், அதிகளவில் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் Kirkuk நகரை குறிவைத்து தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியில் உள்ள Mosul நகரை மீட்க அந்நாட்டு ராணுவமும், குர்திஷ் படையும் இணைந்து உச்சக்‍கட்ட தாக்‍குதலை நடத்தி வருகின்றன. இதனால் Mosul-ல் நகரை நோக்‍கி வேகமாக முன்னேறி வரும் ஈராக்‍ கூட்டுப் படைகள், பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்‍குள் கொண்டு வந்துள்ளன. இந்நிலையில், அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் Kirkuk நகரை குறிவைத்து தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

காவல்துறை கட்டடங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 18 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகளின் தாக்குதலால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.