ஈரானுக்கு எதிராக போர்... ராணுவ அதிகாரத்தை குறைத்து டிரம்பிற்கு கடிவாளம்..?
ஈரான் மீது போர் தொடுக்கும் அதிபர் டிரம்ப் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் என்று அமெரிக்க சபாநாயகர் நான்சி அதிரடியாக கூறியுள்ளார்.
ஈரான் மீது போர் தொடுக்கும் அதிபர் டிரம்ப் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் என்று அமெரிக்க சபாநாயகர் நான்சி அதிரடியாக கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிகிழமை அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பழிக்கு பழி வாங்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. மேற்கு ஈராக்கில் உள்ள ஐன் அல்-ஆசாத் விமானத்தளத்திலும், எர்பில் தளத்திலும் ஈரான் 15 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்தது. ஆனால், இதனை திட்டவட்டமாக அமெரிக்கா மறுத்துள்ளது.
இதுதொடர்பாக பேட்டியளித்த அதிபர் டிரம்ப், ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும். மேலும், மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், ஈரானுக்கு எதிரான அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் போர் பதற்றத்தை தீவிரப்படுத்து போன்று உள்ளது. ஆகையால், அமெரிக்க அதிபர் டிரம்பின் ராணுவ அதிகாரத்தை குறைக்கும் தீர்மானம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்த ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசியிடம் வலியுறுத்தியுள்ளனர்.