இலங்கை குண்டுவெடிப்பு... மூளையாக செயல்பட்ட இஸ்லாமிய மதகுரு உயிரிழப்பு..!
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழந்துவிட்டதாக அதிபர் சிறிசேனா தகவல் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழந்துவிட்டதாக அதிபர் சிறிசேனா தகவல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவற்றில் பெரும்பாலும் தற்கொலைப்படை தாக்குதல் கூறப்பட்ட நிலையில் அதற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது.
மேலும் இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 பேரின் புகைப்படங்களையும், அவர்களது பெயர்களையும் பொதுமக்களின் பார்வைக்கு அந்நாட்டு காவல்துறை நேற்று வெளியிட்டது. தொடர் குண்டுவெடிப்புக்கு தேசிய தவ்ஹீத் ஜமாதை சேர்ந்த ஜக்ரான் ஹசீம் என்ற நபர் மூளையாக செயல்பட்டு வந்ததாக இலங்கை அரசு குற்றம்சாட்டி வந்தது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதலுடன் மூளையாக செயல்பட்டு வந்த மதகுரு ஜக்ரான் உயிரிழந்துவிட்டதாக அதிபர் சிறிசேனா கூறியுள்ளார். இது தொடர்பாக அதிபர் சிறிசேனா கூறுகையில், ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டரின் போது நடந்த ஒட்டலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மதகுரு ஜக்ரன் ஹசீம் உயிரிழந்துவிட்டதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
தொடர் குண்டுவெடிப்பு மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 130 முதல் 140 பேர் இருக்கிறார்கள். தற்போது வரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.