அமெரிக்க அதிபராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து ட்ரம்பின் ஆதரவாளர்கள் பராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், திடீரென அவர்கள் உள்ளே நுழைய முயன்றதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது அமெரிக்கா மட்டுமன்றி உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்  ஜோ பைடன் வெற்றிபெற்றார். துணை அதிபராக கமலா ஹரிசன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில்  அதிகாரப்பூர்வமாக ஜோ பைடன்  வெற்றி பெற்றதை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்று வழங்கும் நிகழ்ச்சி வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. ஏற்கனவே ஜோ பைடனின்  வெற்றியை ஏற்க மறுத்து வந்த ட்ரம்ப். அதை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார். 

இந்நிலையில்  பாராளுமன்ற கட்டிடத்தில் பைசடை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென பாராளுமன்ற வளாகத்திற்குள் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். பின்னர் அவர்கள் பைடர் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தும் வகையில் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முயன்றனர்.  இதனால் பாராளுமன்ற வளாகத்தில் பதற்றம் அதிகரித்தது. உடனே போராட்டக்காரர்களை தடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது வன்முறையாக மாறியது. இந்த திடீர் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு படையினர்  துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

அந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமெரிக்க பாராளுமன்ற  மன்ற கட்டடத்திற்குள் நுழைய முயன்று, துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அமெரிக்காவில் மிகுந்த அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதனையடுத்து ஏராளமான படையினர் குவிக்கப்பட்டது தொடர்ந்து, தற்போது வன்முறை முடிவுக்கு வந்துள்ளது.