உக்ரைனின் மத்திய மேற்கு பிராந்திய தலைநகரான வின்னிட்சியா விமான நிலையத்தை ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மூலம் முற்றிலுமாக அழித்துவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். 

உக்ரைனின் மத்திய மேற்கு பிராந்திய தலைநகரான வின்னிட்சியா விமான நிலையத்தை ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மூலம் முற்றிலுமாக அழித்துவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் பல உயிர்களும் பறிப்போயின. இந்த போதிலும் போர் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி போர் நிறுத்தப்பட்ட இருந்த நிலையில் தற்போது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. அந்த வகையில் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 11 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் முக்கிய நகரங்கள் உருக்குலைந்தன. மேலும் உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளன. அதுமட்டுமின்றி உக்ரைனில் இருந்த இரண்டு அணுமின் நிலையங்களையும் ரஷ்யா தன் வசப்படுத்தியது. இதை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் மீது தொட்ரந்து ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மேலும் கீவ், கார்கிவ் நகருக்குள் ரஷ்ய படையினர் புகுந்து சண்டையிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் கடுமையாக போராடி வருகிறது. இதற்கிடையே தலைநகர் கீவ்வை நோக்கி வடக்கு பகுதியில் 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரஷ்ய படைகள் அணிவகுத்து வரும் செயற்கை கோள் புகைப்படம் வெளியானது. அப்போது தலைநகர் கீவ்வில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ரஷிய படைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், உக்ரைனின் மத்திய மேற்கு பிராந்திய தலைநகரான வின்னிட்சியாவின் விமான நிலையத்தை ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மூலம் முற்றிலுமாக அழித்துவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.