இந்தியாவில் 9000 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி ஒன்பதுக்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு  டிமிக்கி கொடுத்தவர் மல்லையா.

கடன் கொடுத்த தேசிய வங்கிகள் அனைத்தும் அவர் மீது வழக்கு தொடுத்திருந்ததால் லண்டனுக்கு தப்பியோடிய மல்லையா தலைமறைவானார்.

இந்திய அரசின் தொடர் அழுத்தம் காரணமாக விஜய் மல்லையாவை சில மணி நேரத்திற்கு முன்பாக, லண்டனில் ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில்  விஜய் மல்லையாவை கைது செய்யப்பட்டு 3 மணி நேரங்கள் மட்டுமே ஆன நிலையில், வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம்  விஜய் மல்லையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

அவரை இந்தியா கொண்டு வருவது தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.