Vijay Mallya can immediately deport from Landon
வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடிகடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில்தலைமறைவாக இருந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை(வயது61)ஸ்காட்லாண்ட் போலீசார் கைது செய்தனர். ஆனாலும், அவரை உடனடியாக இந்தியா கொண்டு வர முடியாது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தொழிலதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ்நிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தலைமறைவானார்.
இந்நிலையில், விஜய் மல்லையாவை நேற்று ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் லண்டனில் ைகது செய்தனர். வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 மணிநேரத்தில் மல்லையா விடுதலையானார்.
இந்நிலையில், விஜய் மல்லையாவை உடனடியாக நாடு கடத்த முடியுமா எனக் இந்திய அதிகாரிகளிடம் கேட்டபோது, அதற்கான சட்டவழிமுறைகள் நடந்து வருகின்றன என்றார்கள். ஆனால், இங்கிலாந்து சட்டப்படி மல்லையாவை மிக எளிதாக நாடு கடத்துவது என்பது இயலாது என்கிறார்கள் அந்தநாட்டைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள்.
பல கட்டங்கள்
இதற்கிடையே மல்லையாவை நாடுகடத்தும் செயல்பாடு என்பது பல்வேறு கட்டங்களைக் கொண்டதாகும். அதாவது, அந்த மாவட்ட நீதிபதி மல்லையாவை கைது செய்ய ஆணை பிறப்பித்ததால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்த 3 மணிநேரத்தில் மல்லையா நீதிமன்றம் மூலம் ஜாமீனும் பெற்றுவிட்டார்.
இனி விஜய் மல்லையா மீது முதல் கட்ட விசாரணை நடைமுறைபெறும், போலீசார் தங்கள் முறைப்படி எதற்காக கைது செய்தோம், அதற்கான காரணம் ஆகியறை குறித்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வார்கள்.
இந்த முதல் கட்ட விசாரணையில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய விரும்பினால் வழக்கு இழுத்துக்கொண்டே செல்லும். அந்த வழக்கில் இறுதி முடிவு எட்ட உச்ச நீதிமன்றம் வரை கூட செல்ல விஜய் மல்லையாவுக்கு உரிமை இருக்கிறது.
ஏனென்றால், விஜய் மல்லையா லண்டன் குடியுரிமை பெற்றவர் என்பதால், அவரை எளிதாக அங்கிருந்து கிளப்ப முடியாது என்கிறார்கள் இங்கிலாந்து அதிகாரிகள். ஆதலால், மல்லையாவை உடனடியாக இந்தியா கொண்டு வருவது இயலாது.
அரசின் மிகப்பெரிய வெற்றி
விஜய் மல்லையா கைது செய்யப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “ மல்லையா கைது செய்யப்பட்ட நிகழ்வு மத்திய அரசுக்கும், நிதி அமைச்சகத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்’’ எனத் தெரிவித்தார்.
விரைவில் நாடு கடத்தப்படுவார்
மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் சந்தோஷ் குமார் கெங்வார்கூறுகையில், “ விஜய் மல்லையா விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார். அதற்கான சட்ட விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறோம்’’ எனத் தெரிவித்தார்.
