Vijay mallaya twitted Usual Indian media hype Extradition hearing in Court started today as expected

வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடிகடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில்தலைமறைவாக இருந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை(வயது61) இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று ஸ்காட்லாண்ட் போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட மல்லையா, 3 மணிநேரத்தில் ஜாமீனில் வெளியே வந்தவுடன் டுவிட்டரில் கிண்டலாக டுவிட் செய்தார்.

ரூ.9 ஆயிரம் கோடி

தொழிலதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ்நிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தலைமறைவானார்.

இந்நிலையில், விஜய் மல்லையாவை நேற்று ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் லண்டனில் ைகது செய்தனர். வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 மணிநேரத்தில் மல்லையா விடுதலையானார்.

ஜாமீன் பெற்றது ‘டுவிட்’...

Scroll to load tweet…
Scroll to load tweet…

நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்த சில நிமிடங்களில் விஜய் மல்லையாடுவிட்டரில் கருத்து தெரிவித்தார். அவர் டுவிட்டில் வெளியிட்ட பதிவில், “ நான் கைது செய்யப்பட்டதும் இந்திய ஊடகங்கள் வழக்கான செய்தியை பெரிதுபடுத்தி விளம்பரம் தேடிக்கொள்கின்றன. என் மீதான விசாரணை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.