கொரோனா பாதிப்பின் உச்சத்தில் சீனா… வெளியே செல்ல புது டெக்னிக் கண்டுப்பிடித்த தம்பதி… வீடியோ வைரல்!!

சீனாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில் அங்கு காய்கறி வாங்கும் தம்பதி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. 

video of a couple buying vegetables in china has gone viral

சீனாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில் அங்கு காய்கறி வாங்கும் தம்பதி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. சீனாவின் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் குறித்து தெரியாத தகவல்கள்!

அங்கு இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் சுமார் 37 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சீனாவில் மளிகை பொருட்களை வாங்க சென்ற தம்பதியரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த தம்பதிகளை சுற்றி ஒரு பாதுகாப்பான பிளாஸ்டிக் தாள் உள்ளது, அது ஒரு குடை வழியாக பிடிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு பிளாஸ்டிக் கவரில் இருவரும் நின்று கொண்டும் நடப்பதை வீடியோவில் காணலாம்.

இதையும் படிங்க:  ​இன்று கிறிஸ்துமஸ் பெருவிழா! - உலகமெங்கும் கோலாகல கொண்டாட்டம்!

மேலும் வீடியோவில், அந்த பெண் காய்கறிகளை வாங்கத் தொடங்கும் போது, அவர் தனது கையை கவரில் இருந்து லேசாக மேலேற்றி பார்சலை வாங்கிக்கொண்டு உடனடியாக கவரை கீழே விடுவதை காணலாம். பணம் செலுத்தும் போதும் அந்த பெண் அதையே மீண்டும் செய்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ இதுவரை 47,000 பார்வைகளையும் 660 லைக்குகளையும் பெற்றுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios