அடுத்த ஆண்டின் மையப் பகுதியில் கூட தடுப்பூசி கிடைப்பது அரிது..!! உலக சுகாதார நிறுவனம் பகீர்..!!
மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் தடுப்பூசிகள் எதுவும் இதுவரை உலக சுகாதார அமைப்பால் கோரப்பட்ட குறைந்தது 50 சதவீத அளவு செயல்திறனில் தெளிவான சமநிலையை நிரூபிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
ரஷ்யா சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசியை உருவாக்கி விட்டதாக கூறி வரும் நிலையில், அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரைக்கும்கூட தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏனெனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யா கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து சீனாவும் தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளதாகவும், அதற்கான விலையையும் நிர்ணயித்திருப்பதாகவும் அறிவித்தது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித பரிசோதனைக்குப் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டின் ஒழுங்கு முறை குழு ஒப்புதல் அளித்தது.
ஆனாலும் ஐரோப்பிய நாட்டு வல்லுனர்கள் ரஷ்ய நாட்டு தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர், இந்நிலையில் அமெரிக்க பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பைசர் இன்க் ஒரு தடுப்பூசி அக்டோபர் பிற்பகுதியில் விநியோகிக்க தயாராக இருக்கும் என கூறியது. அதாவது நவம்பர்-3 ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்னதாகவே தடுப்பூசி கிடைக்கும் என கூறியுள்ளது. ஆனால் இந்நிலையில் ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மார்க்கரெட் ஹாரிஸ், தடுப்பூசி மற்றும் அதன் செயல்திறன் மற்றும் அதன் பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வதற்கான கடுமையான சோதனைகள் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து கூறிய அவர், அடுத்த ஆண்டு நடுப்பகுதிவரை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கவில்லை, மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் தடுப்பூசிகள் எதுவும் இதுவரை உலக சுகாதார அமைப்பால் கோரப்பட்ட குறைந்தது 50 சதவீத அளவு செயல்திறனில் தெளிவான சமநிலையை நிரூபிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு அதிக காலம் எடுக்க வேண்டும், ஏனென்றால் தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது என்பதை அப்போதே நாம் உணர முடியும். அதே போல உலக சுகாதார நிறுவனமும் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக மூன்றாவது கட்ட பரிசோ தனை பெருமளவில் மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். அதேபோல் சோதனைகளின் அனைத்து தரவுக ளையும் உலக சுகாதார அமைப்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். உலக சுகாதார அமைப்பும் கோவி தடுப்பூசி கூட்டணியும் இணைந்து, தடுப்பூசி ஒதுக்கீட்டு திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இது தடுப்பூசிகளை நியாயமான முறையில், வாங்கவும் விநியோகிக்கவும் உதவும், முதல் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசியை முதலில் போடுவதில் கவனம் செலுத்தப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.