24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பலி..! அலறும் வல்லரசு அமெரிக்கா..!

உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் தற்போது கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இதுவரையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்திருக்கும் நிலையில் 18 ஆயிரத்து 719 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,037 மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

usa registers 2000 corona deaths in 24 hours

டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் அங்கு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் உலகத்தின் பிற நாடுகளில் தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகின் 203 நாடுகளுக்கு பரவி விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகம் முழுவதும் 16,94,954 பேருக்கு கொரோனா பரவி இதுவரை 1,02,607 பேர் உயிரிழந்துள்ளனர்.

usa registers 2000 corona deaths in 24 hours

உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் தற்போது கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இதுவரையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்திருக்கும் நிலையில் 18 ஆயிரத்து 719 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,037 மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 5 லட்சத்து 2 ஆயிரத்து 49 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 33 ஆயிரத்து 483 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயால் வல்லரசு அமெரிக்காவே நிலை குலைந்து போயுள்ளது. அமெரிக்காவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக நியூயார்க் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மட்டும் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியிருக்கிறது.

usa registers 2000 corona deaths in 24 hours

கொரோனா வைரஸிற்க்கு தடுப்பு மருந்தாக ஹைட்ராக்சி குளோரோ குயின் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் ஆலோசனை செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா ஆர்டர் செய்திருக்கும் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துகளை விரைந்து அனுப்ப கோரிக்கை விடுத்தார். அதன்பின் இந்தியாவில் மருந்து ஏற்றுமதி மீதான தடை நீக்கப்பட்டு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு அவ்வகை மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்காவே நிலைகுலைந்து போயிருப்பதால் உலக நாடுகள் அனைத்தும் கடும் பீதியில் இருக்கின்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios