அமெரிக்காவின் 41 - வது அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் காலமானார்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் எச்.டபுள்யு ஜார்ஜ் புஷ், உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் எச்.டபுள்யு ஜார்ஜ் புஷ், உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
அமெரிக்க நாட்டின் 41வது அதிபராக பதவி வகித்தவர் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் ( 94). இவரது மனைவி பார்பரா புஷ் (92). கடந்த சில ஆண்டுகளாக கணவன், மனைவி இருவரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து பார்பரா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் , சிகிச்சை பலனின்றிஇறந்தார். இதையடுத்து கணவர் ஜார்ஜ் புஷ் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருந்தது.
இதைதொடர்ந்து அவர் அமெரிக்காவின் ஹாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த தொற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு வழங்கப்பட்ட சிகிச்சையினால் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், அவர் இன்று வீடு திரும்பினார். அப்போது திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பிரிதாபமாக இறந்தார்.
உடல்நலக்குறைவினால் காலமான ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்ஷின் மகன் ஜார்ஜ் டபுள்யு புஷ், அமெரிக்காவின் 43வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.