அமெரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் கிரீன் கார்டு வழங்கும் நடைமுறையை நிறுத்திவைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்க உள்துறை அமைச்சகம் இதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பியுள்ளது. 

கிரீன்கார்டு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டால், அமெரி்க்காவில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்.இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களின் மனைவி்க்கு வழங்கப்படும் ஹெச்4 விசா 3 மாதங்களுக்குள் ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பின் பரபரப்பு அடங்குவதற்குள் இந்தியர்கள் பாதிக்கும் அடுத்த நடவடிக்கையை அமெரிக்க அரசு எடுத்துள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு குறிப்பிட்ட வரையறைகளின் கீழ் கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இந்த கார்டு பெற்றவர்கள் அந்நாட்டு அரசு வழங்கும் மானியங்கள், சலுகைகளைப் பெற முடியும். அமெரிக்காவில் சாப்ட்வேர் துறையில் இந்தியர்கள் ஏராளமானோர் பணியாற்றுவதால், அவர்களுக்கு கிரீன் கார்டு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது 6.3 லட்சம் இந்தியர்கள் கிரீன்கார்டு அங்கீகாரம் கோரி அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.

 

இந்நிலையில், புதிதாக யாருக்கும் கிரீன்கார்டு வழங்கக்கூடாது, ஏற்கனவே கிரீன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதன் காலக்கெடுவையும் நீட்டிக்கக் கூடாது என்று உள்துறை அமைச்சகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி, அமெரிக்கா விசாவுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள்எவரும் அரசின் பலன்களை எதிர்பார்க்க மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும் என்றுவலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த பரிந்துரைகள் உள்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது மக்கள் கருத்துக்களைத் தெரிவிக்க 60 நாட்கள அவகாசம் தரப்பட்டுள்ளது அதன்பின் அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதியளித்தால் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.