ஈராக்கில் உள்ள அமெரிக்கா படை தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் மூலம் நடத்திய வான்வழித்தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு அந்நாட்டு அதிபர் மற்றும் புதிய ராணுவ தளபதி ஆகியோர் பதில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்திருந்தனர். இதனையடுத்து, அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் பதிலடி கொடுத்தார். 

இந்நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், ஈராக்கின் அல்-ஆசாத் மற்றும் இர்பில் பகுதிகளில் உள்ள அமெரிக்க விமானப்படைகள் முகாம் மற்றும் அதன் கூட்டணி படைகள் மீது ஈரான் 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த ஏவுகணைத் தாக்குதலில் 80 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தற்போது ஈரான் டி.வி. தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அமெரிக்கா ராணுவ தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதால், வளைகுடா நாடுகளில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.