நடுவானில் ரகளை... பெரிய தொகையை அபராதமாக விதித்த விமான நிறுவனம்.. எவ்வளவு தெரியுமா?

நிலைமை மோசமாவதை கண்ட மற்றொரு விமான ஊழியர் இருவரிடையே சமரசம் செய்ய முயன்றார். எனினும், இந்த பெண் அவரை தாக்கி, கடித்து வைத்தார்.

US Flight Passenger Who Was Duct-Taped To Her Seat Faces Record Fine

விமான பயணத்தின் போது நடுவானில் விமான ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்ட பெண்ணிற்கு அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு பெரும் தொகையை அபராதமாக செலுத்த உத்தரவிட்டு உள்ளது. பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் டல்லாஸ் நகரில் இருந்து சார்லட் நோக்கி விமானம் ஒன்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் தேதி இயக்கப்பட்டது. நடுவானில் விமானம் மிக உயரத்திற்கு சென்ற போது, பெண் பயணி ஒருவர் எழுந்து சென்றுள்ளார். இவ்வாறு போகும் போது, பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் அவர் கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார்.

சமரசம்:

அவரை தூக்கி விட விமான ஊழியர் ஒருவர் உதவி செய்ய முன்வந்துள்ளார். ஆனால், அந்த பெண் பயணி அவரை மிரட்டினார். நிலைமை மோசமாவதை கண்ட மற்றொரு விமான ஊழியர் இருவரிடையே சமரசம் செய்ய முயன்றார். எனினும், இந்த பெண் மற்றொரு ஊழியரை தாக்கி, அவரை கடித்து வைத்தார்.

இதுதவிர விமான ஊழியர்கள் மீது எச்சில் துப்பியும், தலையில் தாக்கியும், கடித்து வைத்தும், காலால் உதைத்து விமானத்தினுள் பெரும் அராஜகம் செய்து இருக்கிறார்.  விமான ஊழியர்களை தாக்கியதை அடுத்து, நேராக விமானத்தின் முன்பக்க கதவை திறக்க முயன்றுள்ளார். இந்த சம்பவங்கள் விமானத்தினுள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

US Flight Passenger Who Was Duct-Taped To Her Seat Faces Record Fine

நடுவானில் ரகளை:

ஒருகட்டத்தில் நிலைமை கைமீறி சென்றதை அடுத்து, பொறுமையை இழந்த விமான ஊழியர்கள் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து, அவரின் இருக்கையில் உட்கார வைத்தனர். எனினும், அவர் தொடர்ந்து இருக்கையில் இருந்து எழுந்து வர முயற்சித்தார். இதனால் மற்ற பயணிகள் பாதிக்கப்படலாம் என்ற காரணத்தால், ரகளை செய்த பெண்ணை, அவரின் இருக்கையில் அமர வைத்து கட்டினர். மேலும் அவர் கூச்சிலிட வாய்ப்பளிக்காத வகையில், அவரின் வாயை டேப் கொண்டு மூடினர்.

விமானம் தரையிறங்கிய பின், அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விமானத்தினுள் நடுவானில் அந்த பெண் செய்த ரகளை முழுவதையும், அதே விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோவாக படம் பிடித்தார். பின் அந்த வீடியோவை டிக்டாக்கில் வெளியிட்டார். விமானத்தில் நடைபெற்ற இந்த ரகளை குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை செய்து வந்தது. விசாரணை நிறைவுற்றதை அடுத்து அந்த பெண்ணிற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

US Flight Passenger Who Was Duct-Taped To Her Seat Faces Record Fine

அபராதம்:

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு
81 ஆயிரத்து 950 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 62 லட்சத்து 41 ஆயிரத்து 066 அபராதம் விதித்து இருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த போது விமான ஊழியர்களை தாக்கியது, விமானம் நடுவழியில் பறந்து கொண்டிருந்த போது முன்பக்க கதவை திறக்க முயன்றார். இதை அடுத்து இவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்று இருக்கிறது. எனினும், இந்த பெண்ணிற்கு கடந்த வெள்ளிக் கிழமை அன்று அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு இந்த தீர்ப்பை வழங்கியது. அமெரிக்க விமான போக்குவரத்து துறையில் இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios