ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ஐ.நா சபை..!! அமைதிகாக்க வேண்டும் என கதறல்..!!

அதில் ஒரு ராணுவ கட்டளை அதிகாரியும் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் சீனா இது குறித்து வாய் திறக்கவில்லை.  
 

United nation organization asking peace India -china army

இந்திய- சீன ராணுவ வீரர்களிடையேயான  மோதல் மிகுந்த கவலையளிக்கிறது எனவும், இரு தரப்பினரும் எல்லையில் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் எனவும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது, கடந்த மே-22 ஆம் தேதி, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா எல்லை தாண்டிவிட்டதாக கூறிய, சீனா அப்பகுதியில் ஏராளமான படைகளை குவித்தது, அதனையடுத்து   சீனாவுக்கு இணையாகவும் அதற்கு கூடுதலாகவும்  இந்தியா ராணுவத்தையும், ராணுவ தளவாடங்களையும் குவித்ததால் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. பின்னர் எல்லைப் பதற்றத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தணிக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்ட நிலையில் அதற்கான ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும் பாங்கொங் த்சோ ஏரி மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராணுவத்தை திரும்பப்பெற சீனா மருத்துவருவதுடன் இந்திய எல்லையில் அத்துமீறிவந்தது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை  நள்ளிரவு சீனர்கள் இந்தய எல்லையில் அத்துமீறி ஊடுருவினர், அப்போது அங்கு பீகார் ரெஜிமெண்ட் பாதுகாப்பு பணியில் இருந்தது,  சீனாவின் இந்த அத்துமீறலை ரெஜிமெண்ட் கட்டளை அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபு சக வீரர்களுடன் சென்று சீனர்களை தடுத்ததுடன் இரு நாட்டுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அத்துமீறல் கூடாது என எச்சரித்தார். 

United nation organization asking peace India -china army

அத்துடன் சீன வீரர்கள் உடனே தங்கள் எல்லைக்கு திரும்ப வேண்டுமென கர்னல் சந்தோஷ் பாபு கேட்டுக்கொண்டார், கர்னல் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால்  சுற்றியிருந்த சீனர்கள் அவரிடம் கடுமையான வாக்குவாதம் செய்ய தொடங்கினார். இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோதே சில சீனார்கள் இந்திய  வீரர்களை இரும்பு தடி, கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கத் தொடங்கினர், சீனப் படையினர்  இந்திய ராணுவத்திற்கு சேதம் விளைவிக்க வேண்டுமென்றே தயாராக வந்து இருந்தது அப்போது தெரியவந்தது. இத்தகவலறிந்த கூடுதல் பட்டாலியன் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் வலுத்தது, இந்த தாக்குதல் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்ததாகவும் அதில் கர்னல் சந்தோஷ் பாபு, ஹவில்தார் பழநி, சிப்பாய் குண்டன் ஓஜா உள்ளிட்ட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் சீன படையை சேர்ந்த சுமார் 43 பேர் படுகாயமடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக இதுவரை சீனா எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. இந்நிலையில் அமெரிக்க உளவுத்துறை அதிரடி தகவல் ஓன்று வெளியிட்டுள்ளது. இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் 35 சீன ராணுவத்தினர் கொள்ளப்பட்டதாகவும், அதில் ஒரு ராணுவ கட்டளை அதிகாரியும் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் சீனா இது குறித்து வாய் திறக்கவில்லை. 

United nation organization asking peace India -china army  

இந்நிலையில் இந்திய-சீன வீரர்கள் இடையேயான வன்முறை மோதல் குறித்து ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.  கல்வான் பள்ளத்தாக்கில் எல்.ஐ.சி விவகாரத்தில் இந்தியா-சீனா துருப்புக்களின் வன்முறை மோதல் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் தனது ஆழ்ந்த கவலையை வெளிபடுத்தியுள்ளார்.  இருதரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என வழக்கமான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​குடெரஸ் செய்தித் தொடர்பாளர் அரி கண்ணேகா தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான வன்முறை மற்றும் வீரர்கள் இறந்த செய்தி குறித்து நாங்கள் மிகுந்த கவலைப்படுகிறோம் என்றும் அவர் கூறினார். பதற்றமான சூழ்நிலைகளை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளும் சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார். 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios