Asianet News TamilAsianet News Tamil

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒருவருக்கு பாதிப்பு... புது பீதியை ஏற்படுத்தி வரும் குரங்கு அம்மை..!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு பின் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.

 

United Arab Emirates Reports First Known Monkeypox Case
Author
India, First Published May 25, 2022, 10:35 AM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் ஒரு நாள் முன்பு தான் தெரிவித்து இருந்தது. இதை அடுத்து மறு நாளே ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு பரவி இருக்கும் இரண்டாவது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது. முன்னதாக இஸ்ரேல் நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவி இருந்தது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு பின் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.

குரங்கு அம்மை பாதிப்பு:

மேற்கு ஆப்ரிக்கா நாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் திரும்பிய 29 வயது பெண்ணிற்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

United Arab Emirates Reports First Known Monkeypox Case

“பாதிப்பு ஏற்படும் நிலையில், அவற்றை கண்டறிவதற்கு ஏற்ற வழிமுறைகளை செயல்படுத்தி இருக்கிறோம். பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்கான தொழில்நுட்ப ஆலோசனை குழு நோயை முன்கூட்டியே கண்டறிவது, பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் முறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி இருக்கிறது,” என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

உலக சுகாதார மையம்:

குரங்கு அம்மை பாதிப்பு காய்ச்சல், தசை வலி, அம்மை போன்ற சரும வீக்கம் உள்ளிட்டவைகளை ஏற்படுத்துகிறது. சருமம் மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் சரும திரவம் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. 

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, பொது மக்கள் இடையே இந்த பாதிப்பு பரவுவது குறைவாகவே இருக்கிறது என உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது.  மத்திய மற்றும் கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளில் குரங்கு அம்மை பரவலை தடுக்க முடியும் என உலக சுகாதார மையம் மேலும் தெரிவித்து இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios