முகக்கவசம் இல்லாததால், ஆனால் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் ஒரு பெண் சமயோசிதமாக செயல்பட்டு உள்ளாடையை பயன்படுத்திய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் உலகின் பலவேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. உக்ரைன் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாக, பொது இடத்திற்கு எங்கு சென்றாலும், தங்களின் அடையாள அட்டை எடுத்துச் செல்ல வேண்டும். பொது இடங்களிலும் முகக்கவசம் அல்லது சுவாசக் கருவி அணிய வேண்டும் என்கிற உத்தரவு உள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள கிவில் இருக்கும் தபால் நிலையம் ஒன்றிற்கு இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வருகிறார். அப்போது அவர் அங்கு பணியாற்றும் ஊழியரிடம் பேசுவது போன்று உள்ளது. அதன் பின் உடனடியாக தன்னுடைய உள்ளாடையை முகக்கவசமாக பயன்படுத்துகிறார். இது அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாக, அதன் ஊழியர் ஒருவர் சமூகவலைத்தளங்களில் பதிவிட, தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இருப்பினும் நிறுவனத்தின் இந்த வீடியோவை பகிர்ந்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வீடியோவைக் கண்ட இணையவாசி ஒருவர், அந்தப்பெண் ஒரு சரியான வழியை கண்டுபிடித்துள்ளார். முகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடைகளை பயன்படுத்த யாரும் இதுவரை தடை விதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் நாட்டில் இரண்டு குழந்தைகளின் தாய் தபால் நிலையம் ஒன்றிற்கு முகக்கவசம் அணியாமல் வந்ததால், அவர் தன்னுடைய உள்ளாடையை முகக்கவசமாக மாற்றிக் கொண்ட காட்சி பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.