ஆண்டுக்கு 2 மில்லியன் மக்கள் விலங்குகளால் ஏற்படும் நோய்களால் உயிரிழக்கின்றனர்..!! ஐ.நா மன்றம் அதிரச்சி..!!
ஆண்டும் சுமார் 2 மில்லியன் மக்கள் விலங்குகளால் ஏற்படும் பல்வேறு நோய்களால் உயிரிழக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் விலங்குகளால் ஏற்படும் மனித நோய்களில் அதாவது ஜூனோடிக் நோய்கள்' அதிகரித்துள்ளது
மனிதர்கள் தொடர்ந்து காட்டு விலங்குகளைக் கொன்று துன்புறுத்தினால் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று போன்ற பல்வேறு கொள்ளை நோய்களை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது. ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைகள் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சுற்றுச்சூழல் அபாயங்கள், காட்டு இயற்கை வளங்களை சுரண்டுதல், காலநிலை மாற்றம் மற்றும் காட்டு விலங்குகளை துன்புறுத்துதல் ஆகியவை கொரோனா வைரஸ் போன்ற ஆபத்தான தொற்று நோய்களுக்கு காரணமாகின்றன. கடந்த சில ஆண்டுகளில் விலங்குகள் மற்றும் பறவைகளின் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அறிவியல் ரீதியாக இது போன்ற நோய்கள் 'ஜூனோடிக் நோய்கள்' என்று அழைக்கப்படுகின்றன. மனிதர்கள் சுற்றுச்சூழலையும் காட்டு உயிரினங்களையும் பாதுகாக்கவில்லை என்றால் அவர்கள் நிச்சயம் கொரோனாவைவிட ஆபத்தான நோய்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அந்த அறிக்கையில் ஐநா நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
புரதத்திற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், விலங்குகள் பெருமளவில் கொல்லப்படுகின்றன, எனவே அதனால் ஏற்படும் விளைவுகளையும் மனிதனே எதிர்கொள்ள நேரிடுகிறது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 மில்லியன் மக்கள் விலங்குகளால் ஏற்படும் பல்வேறு நோய்களால் உயிரிழக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் விலங்குகளால் ஏற்படும் மனித நோய்களில் அதாவது ஜூனோடிக் நோய்கள்' அதிகரித்துள்ளது, எபோலா, பறவைக் காய்ச்சல் மற்றும் சார்ஸ் போன்ற கொள்ளை நோய்கள் இந்த வகைக்குள் வருகின்றன. முதலில் இந்த நோய்கள் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு ஏற்படுகின்றன, பின்னர் அவைகள் மனிதனைத் இறையாக்குகின்றன. இந்நிலையில் இது குறித்து தெரிவிக்கும் ஐ.நா சுற்றுச்சூழல் திட்டத்தின் நிர்வாக இயக்குனர் இங்கர் ஆண்டர்சன், கடந்த நூறு ஆண்டுகளில் புதிய வைரஸ்களால் மனிதர்கள் குறைந்தது ஆறு வகையான ஆபத்தான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறுயுள்ளார், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், கீழ் வாத நோய், நான்கு மடங்கு காசநோய், மற்றும் ரேபீஸ் போன்ற உயிரியல் நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். இது மட்டுமல்லாமல் இந்த நோய்கள் பொருளாதார சேதத்தையும்ஏற்படுத்துகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் இறைச்சி உற்பத்தி 260 சதவீதம் அதிகரித்துள்ளது, வளர்ப்பு மற்றும் காட்டு விலங்குகளை பெருமளவில் இறைச்சிக்காக சார்ந்துள்ள பல சமூகங்களும் உள்ளன. நாம் விவசாயத்தை அதிகரித்துக்க்கொண்டே செல்வதன் மூலம் இயற்கை வளங்களை சுரண்டப்படுகின்றன, பெருமளவில் விவசாயத்திற்காக காட்டு விலங்குகளின் வாழ்விடங்களை அழித்து அவற்றை ஆக்கிரமித்துக் கொள்கிறோம், அணைகள், நீர்ப்பாசன வசதிகள், தொழிற்சாலைகள் மற்றும் பண்ணைகள் ஆகியவை மனிதர்களால் ஏற்படும் 25 சதவீத தொற்றுநோய்கள் காரணமாகின்றன என அவர் கூறியுள்ளார். ஐநா மன்றத்தின் இந்த அறிக்கை பிரச்சினைகளை மட்டும் குறிப்பிடாமல் எதிர்காலத்தில் இதுபோன்ற நோய்களை எவ்வாறு தவிர்ப்பது என்பதையும், பல நாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கியுள்ளன, சுற்றுச்சூழல் சீரழிவை குறைக்கவும் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்கவும் வனத்திற்கு பாதிப்பில்லாத விவசாயத்தை மேம்படுத்துவதற்கான வழிகளையும் ஐ.நா நிபுணர்கள் விரிவாக விளக்கியுள்ளனர். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள ஆண்டர்சன் சுற்றுச்சூழல் கட்டமைப்பில் நாம் தொடர்ந்து அத்துமீறி காடுகளையும், விலங்குகளையும் சேதப்படுத்தினால் வரும் ஆண்டுகளில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களும் பன்மடங்கு அதிகரிக்கும் என்பதை அறிவியல் தெளிவாக காட்டுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று போன்ற ஆபத்தான நோய்களை தடுக்க சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகளை பாதுகாப்பதில் மனிதர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.