நித்யானந்தாவுக்கு ஐ.நா கொடுத்த விருது... மீனாட்சி தாயே இதுவும் உன் வேலைதானா..?

நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு, ஐக்கிய நாடுகளின் உலகளாவிய வளர்ச்சி அமைப்பு உலக அமைதி மற்றும் மனித இனத்தின் ஆன்மீக விழிப்புணர்வை உயர்த்தியதற்கான விருதும் சான்றிதழ் அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. 

UN Award for Nithyananda ... Meenakshi Mother Is this your job too?

பகவான் நித்யானந்த பரமசிவம் என்கிற பெயரில் நித்யானந்தா வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், ‘’உங்களுடைய இதயம்தான் பரமசிவ பரம்பொருளின் ஸ்ரீகைலாஸம். உங்கள் இதயங்களில் எல்லாம் பரமசிவ பரம்பொருளின் திருக்கைலாயத்தை உள்வாங்குங்கள். உங்கள் இதயங்கள்தான் பரமசிவ பரம்பொருளின் இருப்பிடம் என்பதை உணருங்கள். எந்த மனிதரும் சாதாரண மனிதராக பிறக்கவில்லை. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தெய்வநிலை உள்ளது.UN Award for Nithyananda ... Meenakshi Mother Is this your job too?

எத்துனைதான் துக்கம் கொடுக்கப்பட்டாலும், எத்துனைதான் தாக்கப்பட்டாலும், ஞானத்தின் ஸ்திர தன்மையால், ஆன்மபலத்தால், வாழ்க்கையை ஆனந்தமயமாக வாழ்ந்து அதை உலகிற்கு சொல்லுகின்ற ஜீவன் முக்தர்கள்களை ஸ்ரீகைலாஸா பூமிக்கு அளித்து கொண்டே இருக்கும். தனிமனிதருக்குள் ஸ்ரீகைலாஸா நிகழ பூமியில் அவர்களுக்கான ஸ்ரீகைலாஸா அமைத்து தரப்படவேண்டும்.

UN Award for Nithyananda ... Meenakshi Mother Is this your job too?

ஸ்ரீகைலாஸா என்பது ஜீவன்முக்த சமுதாயம். சமூகமே வாழ்வின் உயர்வை நோக்கிச் செல்வதுதான் ஜீவன் முக்த சமுதாயம் என்று சொல்கிறேன்.  அக்டோபர் 29 – 2018 பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு, ஐக்கிய நாடுகளின் உலகளாவிய வளர்ச்சி அமைப்பு (United Nations Global Development Organization) உலக அமைதி மற்றும் மனித இனத்தின் ஆன்மீக விழிப்புணர்வை உயர்த்தியதற்கான விருதும் சான்றிதழும் அளித்துள்ளது.UN Award for Nithyananda ... Meenakshi Mother Is this your job too?

நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நிஜமான குரு யார் என்றால் உங்கள் வெறுப்பையும் மீறி உங்கள் உயிரை காதலிப்பவர். நீங்கள் அவரை வெறுத்தாலும் உங்களை உங்கள் உயிருக்காக உங்களை அவர் வெற்றி அடையச் செய்வார். இயற்கையாகவே நம்முள் இருக்கும் இறைசக்தியை வெளிப்படுத்த வேண்டுமானால், அதற்கான சரியான சுற்று சூழலியல் வேண்டும். இறைசக்தியை ஊக்குவிக்கும் சமுதாயம் வேண்டும். இறைசக்தியோடு இணைத்து கொள்ளும் வழிமுறைகளும், வாழ்க்கை முறைகளும் கற்றுத் தரப்படவேண்டும்’என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

 

இதனை படித்த நெட்டிசன்கள் இந்த சான்றிதழும் மீனாட்சி தாயிடம் நீ கேட்டு அவர் ஆசிர்வாதத்தால் கிடைத்ததா? என நையாண்டி செய்து வருகின்றனர்.   
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios