உக்ரைன் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்..? 170 பயணிகளும் உடல்சிதறி உயிரிழப்பு..!
ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 737 போயிங் ரக விமானம், 170 பயணிகளுடன் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 170 பேரும் உயிரிழந்தனர்.
ஈரான் தலைநகரில் இருந்து 180 பேருடன் புறப்பட்ட உக்ரைனின் போயிங் 737 வகை விமானம் விழுந்து நொருங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 737 போயிங் ரக விமானம், 170 பயணிகளுடன் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 161 பயணிகள் 9 ஊழியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதா அல்லது தாக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நடைபெற்ற பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
முன்னதாக ஈரானின் 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா தெரிவித்ததற்கு பதிலடியாக 290 என்ற எண்ணை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்தார். 1988-ம் ஆண்டு ஜூலை மாதம் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய விமானம் (ஈரான் ஏர் 655) அமெரிக்க போர்க்கப்பலால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 66 குழந்தைகள் உள்பட 290 பேர் கொல்லப்பட்டனர். இதை குறித்தே தற்போது 290 என்ற எண்ணை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என ஹசன் ரவுகானி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஹசன் ரவுகானி கூறியதை அடுத்து இந்த விமான விபத்து சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.