Asianet News TamilAsianet News Tamil

உக்ரைன் மேயரை தூக்கிய ரஷியா.. வேடிக்கை பார்த்த உக்ரைன் ராணுவம்.. பரபரப்பு சம்பவம்

பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது படையெடுக்கத் தொடங்கிய ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் கோர தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டும் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்தும் வருகின்றனர்.

Ukrainian parliament says Russian forces have abducted Ivan Fedoro the mayor of Melitopol in Ukraine
Author
India, First Published Mar 12, 2022, 12:06 PM IST

புடின் எச்சரிக்கை :

மேற்குலக நாடுகள் தங்கள் மீது விதித்துள்ள தடை நடவடிக்கையைக் குறைத்துக் கொண்டால் மட்டுமே இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை அதிபர் மாளிகையில் சந்தித்த புதின் அப்போது பேசுகையில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ரஷ்ய வளர்ச்சியை ஒரு போதும் தடுக்காது என்றும் அவை ரஷ்யா வலுவானதாகவே மாற்றும் என்றும் புதின் தெரிவித்தார்.

Ukrainian parliament says Russian forces have abducted Ivan Fedoro the mayor of Melitopol in Ukraine

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த போரால் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், குறைந்தது 20 லட்சம் பேர் இடம் பெயர்ந்து உள்ளனர். இந்தப் போர் அமெரிக்கா ரஷ்யாவுக்கும் பதற்றத்தைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. உக்ரைன் இந்த அளவுக்குப் போராடும் என்று ரஷ்ய ராணுவத்தினர் துளி கூட எதிர்பார்க்கவில்லை என்றும் இது அவர்களை ஆச்சரியப்படுத்தியதாகவும் அமெரிக்க உளவுத்துறை முகவர்கள் கூறுகின்றனர். 

ரஷியா ஆதிக்கம் :

முக்கிய அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் உள்ளது. ஆனால் தலைநகர் கீவ், 2-வது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றை ரஷிய படையால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை. ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள். இதனால் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை ரஷியா அதிகப்படுத்தியபடியே இருக்கிறது. 

Ukrainian parliament says Russian forces have abducted Ivan Fedoro the mayor of Melitopol in Ukraine

மனிதாபிமான அடிப்படையில் கீவ் உள்ளிட்ட 5 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்தாலும், அதையும் மீறி தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.இதனால் உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் இடைவிடாமல் தொடர்ந்தபடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேயர் கடத்தல் :

இந்நிலையில்,  உக்ரைனில் உள்ள மெலிடோபோல் மேயர் இவான் ஃபெடோரோவை ரஷியப் படைகள் கடத்திச் சென்றதாக உக்ரைன் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தெற்கு உக்ரைனின் மெலிடோபோல் நகைரை ரஷிய படை ஆக்கிரமித்துள்ளது. அங்கு, 10 பேர் கொண்ட குழு மேயர் இவான் ஃபெடோரோவை கடத்திச் சென்றுள்ளது. ஆயுத விநியோகப் பிரச்சினையைக் கையாளும்போது மேயர் ரஷியப் படைகளுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டதால்  சுற்றி வளைத்து கடத்தியதாக உக்ரைன் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

Ukrainian parliament says Russian forces have abducted Ivan Fedoro the mayor of Melitopol in Ukraine

மேயர் கடத்தலை ஜெலென்ஸ்கி வீடியோ பதிவு ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தினார். அதில், வெளிப்படையாக ரஷியப் படையெடுப்பாளர்களின் பலவீனத்தின் அறிகுறியாகும். ரஷியப் படை அடுத்தகட்ட பயங்கரவாதத்திற்கு நகர்ந்துள்ளனர். மெலிடோபோல் மேயர் பிடிபட்டது ஒரு குறிப்பிட்ட நபருக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது. உக்ரைனுக்கு எதிரானது மட்டுமல்ல. இது ஜனநாயகத்திற்கு எதிரான குற்றம் என்று தெரிவித்து உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios