Watch Ukrainian missile hits Russian tank taking two Landmine: மேலும் அதனை பருகினாலோ அல்லது சருமம் மீது பட்டாலோ கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். இந்த பகுதிக்கு அடைக்கலம் தேடி வர வேண்டாம். 

உக்ரைனின் கிழக்குப் பகுதியை அடுத்த டோனெக் இடத்தில் இரண்டு நடமாடி கொண்டு இருந்த ரஷ்ய டேன்க் தரையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்து வெடிகுண்டு மீது ஏறியதில், வெடித்துச் சிதறியது. இதை அடுத்து உக்ரைன் ஏவுகணை ரஷ்ய டேன்க்கரை தாக்கி அழித்தது. இந்த சம்பவம் முழுக்க டிரோன் கேமராக்களில் பதிவாகி உள்ளது. வெடிகுண்டு தாக்குதலில் சிக்கிய போதும், டேன்க்கரில் இருந்த ராணுவ வீரர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

டோனெக் பகுதியில் வலம் வந்த படி ரஷ்ய டேன்க்கர் உக்ரைன் பொசிஷன்களை குறிவைத்து தாக்கிக் கொண்டு இருந்தது. தற்போது இந்த பகுதியில் ரஷ்யா ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்ய டேன்க்கர் வீழ்த்தப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Scroll to load tweet…

இரசாயண ஆலை:

இந்த நிலையில், இரசாயண ஆலையை ஆக்கிரமிக்கும் போது, நைட்ரிக் ஆசிட் வைக்கப்பட்டு இருந்த டேன்க்-ஐ ரஷ்ய ராணுவ வீரர்கள் தாக்கி அழித்தனர் என்று கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள செர்வோடென்க் நகர ஆளுநர் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்த தகவலை அவர் டெலிகிராம் அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளார்.

“இரசாயண ஆலையின் அருகில் நைட்ரிக் ஆசிட் சேமிக்கப்பட்டு இருந்த டேன்க் தாக்கப்பட்டது. நைட்ரிட் ஆசிட்-ஐ சுவாசிப்பது ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் அதனை பருகினாலோ அல்லது சருமம் மீது பட்டாலோ கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். இந்த பகுதிக்கு அடைக்கலம் தேடி வர வேண்டாம்,” என அவர் தெரிவித்து இருக்கிறார்.

உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில் ரஷ்யா நடத்தி வரும் போர் மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதன் கிழமை அன்று உக்ரைனின் கிழக்கு நகரமான அவிதிவ்காவை முழுமையாக ஆக்கிரமிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றை துண்டித்து விட்டதாக கூறப்பட்டு உள்ளது.