Asianet News TamilAsianet News Tamil

Ukraine - Russia Crisis: எங்க இடத்திற்கு நீங்க வாங்க..ரஷ்யா கோரிக்கையை உதறி தள்ளிய உக்ரைன் அதிபர்..

Ukraine - Russia Crisis:போர் நிறுத்தம் குறித்து பெலாரஸில் பேச்சுவாரத்தை நடத்த ரஷ்யா விடுத்த அழைப்பை உக்ரைன் நிகாரித்துள்ளது. மேலும் இஸ்தான்புல்,பாகூ உள்ளிட்ட 5 இடங்களில் ஏதாவது ஒன்றில் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் பரிந்துரைந்துள்ளார். 
 

Ukraine - Russia Crisis updates
Author
Ukraine, First Published Feb 27, 2022, 2:51 PM IST

Ukraine - Russia Crisis:போர் நிறுத்தம் குறித்து பெலாரஸில் பேச்சுவாரத்தை நடத்த ரஷ்யா விடுத்த அழைப்பை உக்ரைன் நிகாரித்துள்ளது. மேலும் இஸ்தான்புல்,பாகூ உள்ளிட்ட 5 இடங்களில் ஏதாவது ஒன்றில் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் பரிந்துரைந்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் இராணுவ தாக்குதல் உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைந்து வருகின்றனர். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே போர்தாக்குதல், நான்காவது நாளாக  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், உக்ரைன் தலைநகர் கீவ்- யை கைப்பற்றும் நோக்கில், ரஷ்ய படை விடாது குண்டு மழை பொழிந்து வருகிறது.

அங்குள்ள மக்கள், பதுங்கு குழி , சுரங்க பாதை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்துள்ளனர். மேலும் கீவ் நகர் முழுவதும் உக்ரைன் இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, கடும் ஊரடங்கு அமலாகியுள்ளது. எக்காரணத்திற்கும் மக்கள் யாரும் வெளியில் வர கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏவுகணைகள், பீரங்கிகள், குண்டுகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் இன்னும் சில நாட்களில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ரஷ்ய ராணுவம் மக்கள் குடியிருப்புகளை நோக்கியும் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியது. இருப்பினும், இதை முற்றிலுமாக மறுத்த ரஷ்யா, ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கி வருவதாக விளக்கம் அளித்தது. இருப்பினும், உயரமான அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதனிடையே ரஷ்யா- உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பெலாரஸில் பேச்சுவாரத்தைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்தது.ஆனால் பெலாரஸ் அரசும் ரஷ்யா எங்கள் மீது போர்தொடுக்க உதவியுள்ளதால் அங்கு பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். மேலும் மற்ற இடங்களில் பேச்சுவார்த்தை நடக்கும் பட்சத்தில் அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் விளக்கியுள்ளார். வார்சா,பிராட்டிஸ்லாவா,புடாபெஸ்ட், இஸ்தான்புல், பாகூ ஆகிய இடங்களை பேச்சுவார்த்தைக்காக முன்மொழிந்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios