Ukraine crisis : குடியிருப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்... உக்ரைனின் கீவில் பொதுமுடக்கம் அமல்!!

ரஷ்யாவின் தொடர் தாக்குதல் காரணமாக உக்ரைனின் தலைநகர் கீவ்வில் இன்று இரவு முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. 

ukraine kiev imposed 36 hours curfew due to russia attack

ரஷ்யாவின் தொடர் தாக்குதல் காரணமாக உக்ரைனின் தலைநகர் கீவ்வில் இன்று இரவு முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா இன்று 20 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் இந்த கொடூர தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் உள்ள மருத்துவமனை, மக்கள் குடியிருப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுமட்டுமின்றி உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல கட்டிடங்கள் உருகுலைந்தன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் நாள்தோறும் தீவிரம் அடைந்து வருகிறது. உக்ரைனை சுற்றி வளைத்த ரஷ்யா, தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தியது.

ukraine kiev imposed 36 hours curfew due to russia attack

இந்த போர் தொடரும் நிலையில், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர்.  ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனிடையே உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருகின்றன.

ukraine kiev imposed 36 hours curfew due to russia attack

மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த தொடர் தாக்குதல் காரணமாக உக்ரைனின் தலைநகர் கீவ்வில் இன்று இரவு முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இதுக்குறித்து பேசிய கீவ் நகர மேயர், கீவ் முழுவதும் இன்று இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே கீவ் நகர் நோக்கி ரஷ்ய படைகள் நெருங்கி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும், பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios