United Kingdom: இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் நீடிப்பார் ஏன்?

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் வரை இவர்தான் காபந்து பிரதமராக நீடிப்பார். அடுத்த வாரம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று போரிஸ் அறிவித்துள்ளார். 
 

UK Prime Minister Boris Johnson Resigns

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் வரை இவர்தான் காபந்து பிரதமராக நீடிப்பார். அடுத்த வாரம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று போரிஸ் அறிவித்துள்ளார். 

டவுனிங் ஸ்டீரிட்டில் இருக்கும் பிரதமர் இல்லத்தில் இருந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். விரைவில் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார், அதன் பின்னரே புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவித்தார்.

Conservative Party: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் இந்திய வம்சாவழியான ரிஷி சுனக்?

போரிஸ் ஜான்சன் ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. முக்கிய குற்றச்சாட்டாக பாலியல் புகாருக்கு உள்ளான கிரிஸ் பின்ஷர் என்பவரை துணை கொறடாவாக தேர்வு செய்து இருந்தது சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து நடந்த இடைத் தேர்தலில் கட்சி படுதோல்வியை சந்தித்து இருந்தது. இதையடுத்து, 
நிதியமைச்சராக இருந்த ரிஷி  சுனக், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சஜித் ஜாவெத் இருவரும் ராஜினாமா செய்தனர்.

United Kingdom: போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யலைன்னா; ராணி எலிசபெத் பதவியை பறிப்பாரா?

இவர்களைத் தொடர்ந்து அதிகாரிகள், அமைச்சர்கள் என்று 50க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு நாட்களில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் புதிய நிதியமைச்சராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நதிம் ஜவாஹி, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் பென் வால்லேஸ் இருவரும் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். நெருக்கடிக்கு உள்ளான போரிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இங்கிலாந்து நாட்டின் சட்டத்தின்படி அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை காபந்து பிரதமாராக தற்போதைய பிரதமரே நீடிப்பார். அந்த வகையில் அடுத்த பிரதமர் தேர்வு செய்வதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதுவரை போரிஸ் பிரதமராக நீடிப்பார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios