கொரோனா: உயிரை காப்பாற்றிய மருத்துவரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய பிரிட்டன் பிரதமர்! நெகிழவைக்கும் நன்றியுணர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சீரியஸாக இருந்த தனக்கு சிகிச்சையளித்து தனது உயிரை காப்பாற்றிய மருத்துவரின் பெயரை தனது குழந்தைக்கு சூட்டி தனது நன்றையை தெரிவித்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
 

uk prime minister boris johnson names doctor name to his son

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பரவி பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் 34 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 11 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 

உலகளவில் பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திய கொரோனா வைரஸ், சாமானியர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை பாரபட்சமின்றிஅனைவரையும் தாக்கியது. 

அந்தவகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலக தலைவர்களில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் ஒருவர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 55 வயதான போரிஸ் ஜான்சன், உடல்நிலை படுமோசமானதால் ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் மருத்துவர்கள் கடுமையாக போராடி அவருக்கு சிறப்பான சிகிச்சையளித்து அவரை கொரோனாவிலிருந்து மீட்டனர். கொரோனாவிலிருந்து மீண்டு ஓய்வில் இருந்து மீண்ட போரிஸ் ஜான்சன், கடந்த சில தினங்களுக்கு முன் அலுவல் பணியை தொடங்கினார்.

uk prime minister boris johnson names doctor name to his son

இதற்கிடையே, அவருக்கும் அவரது காதலியான 32 வயதான கேரி சைமண்ட்ஸுக்கும் கடந்த சில தினங்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. இந்நிலையில், அந்த குழந்தைக்கு தனக்கு சிகிச்சையளித்து தனது உயிரை காப்பாற்றிய மருத்துவரின் பெயரை சூட்டியுள்ளார் போரிஸ் ஜான்சன். 

போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது நிக்கோலஸ் என்ற மருத்துவர் தான் அவருக்கு சிகிச்சையளித்துள்ளார். உடல்நிலை ரொம்ப மோசமாகி ஐசியூவில் இருந்த போரிஸ் ஜான்சனுக்கு சிறப்பான சிகிச்சையளித்து அவரை குணப்படுத்தியவர் மருத்துவர் நிக்கோலஸ். இந்நிலையில், தனது குழந்தைக்கு அந்த மருத்துவரின் பெயரையும் சேர்த்து வில்பிரட் லேவெரி நிக்கோலஸ் ஜான்சன் என பெயர் சூட்டியுள்ளார் போரிஸ் ஜான்சன். 

தனது உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு தனது நன்றியை உரித்தாக்கும் விதமாக தனது மகனுக்கு அந்த மருத்துவரின் பெயரை சூட்டியுள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios