ஹனிமூனுக்கு மகளுடன் கூட போன மாமியார் கர்ப்பமாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது தாயே தன் கணவரை அபகரித்து விட்டதாக கண்ணீர் மல்க மகள் கூறியுள்ளார். 

இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து சில வருடங்கள் முன்பு நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போது இளம் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை மீடியாக்களில் தெரிவித்துள்ளார். தென் மேற்கு லண்டனை சேர்ந்த பெண் லாரன் வால் (34). இவருக்கு 19 வயதாக இருந்தபோது, பால் ஒயிட் என்ற இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. பால், ஏர்போர்ட் ஊழியராக பணியாற்றியவர். லாரனுக்கு தாய் மட்டும்தான், தந்தை இல்லை. லாரன்-பால் ஒயிட் திருமணத்தை பல கோடி செலவு செய்து வெகு விமர்சியாக நடைபெற்றது. 

இதனையடுத்து, திருமண புதிய தம்பதி 2 வாரம் ஹனிமூனுக்கு தேவோன் பகுதிக்கு கிளம்பியுள்ளனர். ஆனால், தாயை பிரிந்து நீண்ட நாட்கள் லாரன் இருந்ததில்லையாம். ஆகையால், தன்னுடனே ஹனிமூனுக்கு கூட்டிச் செல்லலாம் என லாரன் முடிவு வெடுத்தார். இதுபற்றி ஜூலியிடமும் சொல்லியுள்ளார். சின்னஞ்சிருசுங்க சந்தோஷமா இருங்க நான் எதற்கு நடுவுல என முதலில் மறுத்துள்ளார். ஆனால், லாரன் மற்றும் பால் இருவரும் தொடர்ந்து வற்புறுத்தியதால், வேறு வழியின்றி, மகளின் ஹனிமூனுக்கு துணைக்கு சென்றார்.

ஹனிமூன் போன இடத்தில் மாமியார் ஜூலியுடன் ஜாலியாக பேசி அரட்டை அடித்துள்ளார் பால். நமது அம்மாவுடன் பிரண்ட்லியாக கணவர் பழகுகிறாரே என்று மகள் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், ஹனிமூன் போயிட்டு வந்து திரும்பிய லாரன் வால் தாய் செல்போனை எடுத்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது, பால் மற்றும் ஜூலி நடுவேயான ஆபாச உரையாடல்களை பார்த்து அதிர்ந்து போயுள்ளார். ஆபாச விஷயங்களை பேசி இருவரும் ஜாலியாக இருந்துள்ளதை பார்த்து லாரன் சகோதரிக்கு தலை சுற்றிப்போனது.

உடனே இதுபற்றி லாரனிடம் சொல்ல, அவரும் கிறுகிறுத்துப் போயுள்ளார். லாரனுக்கும் பாலுக்கும் 2004 மார்ச் மாதம், பெண் குழந்தை பிறந்தது. இதன்பிறகுதான் இவர்கள் திருமணம் செய்தனர். அந்த பெண் குழந்தைக்கு 7 மாதங்கள்தான் ஆன நிலையில், திடீரென பால் தனது திருமண மோதிரத்தை கழற்றிவிட்டு, ஜூலி வீட்டுக்கே போய் குடியேறிவிட்டாராம். எல்லாவற்றுக்கும் உச்சமாக, ஜூலி அடுத்த 9-வது மாதத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆம். மருமகன் பால்தான் அந்த குழந்தையின் தந்தை. தான் உயிருக்கு உயிராக நம்பிய இரு உறவுகளும் சேர்ந்து கொண்டு, தனக்கு துரோகம் இழைத்ததை நினைத்து இப்போதும் வருந்துகிறார் லாரன். தன்னை திருமணம் செய்து கொண்ட 5 வருடங்கள் கழித்து தனது தாயை தனது கணவர் கல்யாணம் செய்துகொண்டார் என்று லாரன் கண்ணீருடன் தெரிவித்தார்.